Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவை காட்டி.. பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவும் அமெரிக்கா! பிளான் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் சீனாவை பற்றி பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகள் இருந்தன. அத்துடன் இந்தியாவுடன் சீனா எல்லை பிரச்சனையில் தீவிரமாக ஈடுபடும் என்றும் கூறியிருந்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த சர்வதேச அரசியல் நிபுணர்கள், உண்மையில் அமெரிக்காதான் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் உதவுகிறது என்றும், அதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர்.

சர்வதேச அரசியல் நிபுணர் டாக்டர் இம்ரான் குர்ஷித், அமெரிக்காவின் அறிக்கை குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதில், பெண்டகன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் இந்தியா-சீனா எல்லை பிரச்சனை விவரித்துள்ளார்.

Trump Asia US

அதாவது, இந்தியாவுடன் சமீப காலமாக எல்லை பிரச்சனையில் ஈடுபட்டு வந்த சீனா தற்போது சமாதான போக்கை கடைபிடித்திருக்கிறது. ஆனால் இந்த சமாதானம், பிரச்சனையை தீர்ப்பதற்காக அல்ல! மாறாக, அமெரிக்காவுடன் இந்தியா சேர்வதை தடுக்கவே சீனா இந்த நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக பென்டகன் அறிக்கை குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச பகுதியை முக்கியமாக கருதும் சீனா, இதை கைப்பற்ற திட்டமிட்டிருக்கிறது என்றும் பெண்டகன் கூறியிருந்தது.

இங்குதான் அமெரிக்காவின் அறிக்கை முரண்படுகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவை காப்பாற்ற எந்த நோக்கமும் இல்லை. மாறாக, சீனாவுடன் இந்தியா சேர்ந்துவிடக்கூடாது, அப்படி சேர்ந்தால் தன்னுடைய நலனுக்கு பிரச்சனை வந்துவிடும் என்றுதான் இப்படி சொல்கிறது என்று இம்ரான் குர்ஷித் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் நலனில் உண்மையில் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது எனில், எதற்காக பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும்? என்றும் இம்ரான் குர்ஷித் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஐஎம்எஃப் மூலம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவவில்லையா? F-16 போர் விமானத்தை கொடுத்து உதவவில்லையா? இப்படியெல்லாம் செய்து இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை தூண்டிவிட்டு, தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதை போல தன்னை காட்டிக்கொள்கிறது எனவும் இம்ரான் குர்ஷித் விமர்சித்திருக்கிறார்.

ஒரு கண்ணில் எண்ணெய்யும், மறு கண்ணில் வெண்ணையும் வைத்து அமெரிக்கா பார்க்கிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருக்கையில், டிரம்ப் பாக் ராணுவ தளபதி அசீம் முனிரை அழைத்து பாராட்டியிருந்தார். விளைவு, அமெரிக்க மண்ணில் நின்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஆயுத மிரட்டலை பாகிஸ்தான் விடுத்தது. இதையெல்லாம் பார்க்கும்போது பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரிப்பது வெளிப்படையாக தெரிகிறது. இது சீனாவை வலுப்படுத்துவதற்கு சமம் என்று குர்ஷித் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தலையீடு வங்கதேசம் வரை நீண்டிருக்கிறது. வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த கிளர்ச்சியில் அமெரிக்காவின் தலையீடு இருக்கிறது என்று விமர்சித்துள்ள குர்ஷித், இது சீனாவுக்குதான் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா தெற்காசியாவையும், இந்தோ பசிபிக் பிராந்தியத்தையும் தனித்தனியாக பார்க்க கூடாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. சீனாவை கட்டுப்படுத்த வேண்டும் எனில், அந்த அளவுக்கு இந்தியாவை வளர்க்க வேண்டும் என்று குர்ஷித் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+