டெல்லி சட்டசபைக்கு கீழ்.. தோண்டிப்பார்த்தால் நீண்ட சுரங்கம்.. செங்கோட்டை வரை ரகசிய பாதை.. பரபரப்பு
டெல்லி: டெல்லி சட்டசபைக்கு கீழே சுரங்கம் இருப்பதாக இத்தனை நாட்களாக பல்வேறு பேச்சுக்கள் அடிபட்ட நிலையில் உண்மையான சுரங்கம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபையாக தற்போது இருக்கும் பகுதி முன்பு ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் மத்திய சட்டசபை பகுதியாக செயல்பட்டு வந்தது. 1926ல் இதே சட்டசபை பகுதி நீதிமன்றமாக செயல்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இங்கு பல தீர்ப்புகள் வழங்கப்பட்டது.
தூக்கு தண்டனை நிறைவேற்றும் தூக்கு அறையும் இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் செங்கோட்டையில் இருந்து நீதிமன்றமாக இருந்த இந்த சட்டசபை பகுதிக்கு ரகசிய சுரங்கம் இருந்ததாக நிறைய தகவல்கள் உலவி வந்தன.

கண்டுபிடிப்பு
ஆனால் அந்த சுரங்க பாதை இத்தனை நாட்கள் கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில்தான் டெல்லி சட்டசபைக்கு கீழே இருக்கும் சுரங்கம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டசபைக்கு உள்ளே ஒரு பகுதியில் இதன் வாய் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. இதை திறந்து பார்த்ததில் மண் அடித்து மூடி இருந்துள்ளது.

மண்
மண் அடைத்து மூடி இருந்த பகுதியை தோண்டியதில் பெரிய சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில மீட்டர்கள் தூரம் இந்த சுரங்கம் சென்றுள்ளது. மிகவும் வலுவான முறையில், இப்போதும் நல்ல முறையில் இந்த சுரங்கம் இருந்துள்ளது. சட்டசபையில் இருந்து டெல்லி செங்கோட்டை வரை இந்த சுரங்கம் செல்கிறது.

ஆனால்
ஆனால் இதன் பாதைகள் பல்வேறு இடங்களில் அழிந்துவிட்டது. இது தொடர்பாக டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயால் அளித்த பேட்டியில், இந்த சுரங்கம் நல்ல நிலையில் இருக்கிறது. ஆனாலும் முழு பாதையும் இப்போது இல்லை. இடையில் பல பகுதிகளில் கழிவு நீர் குழாய்கள், மெட்ரோ பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுரங்க பாதை பாதி அழிந்துவிட்டது.

முடியாது
மீண்டும் இந்த சுரங்க பாதையை தோண்டி, அதை புதுப்பிக்க முடியாது. இருந்தாலும் இதன் வாய் பகுதியை கண்டுபிடித்ததில் சந்தோசம். சுதந்திர போராட்ட கைதிகளை செங்கோட்டையில் இருந்து இங்கே கொண்டு வர இந்த பாதை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதே சட்டசபைக்கு உள்ளே ஒரு இடத்தில் தூக்கு அறை உள்ளது. இது திறக்கப்படாமல் உள்ளது.

திறக்க வேண்டும்
இதை திறக்கும் முடிவில் இருக்கிறோம். இந்த அறை பகுதியை புதுப்பித்து மக்கள் பார்வைக்கு விட உள்ளோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடம் முடிந்துவிட்டது. இதை நினைவு கூறும் வகையில் இந்த அறை பகுதியை புதுப்பித்து மக்கள் பார்வைக்கு விட இருக்கிறோம் என்று டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயால் தெரிவித்துள்ளார்.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications