"காப்பிரைட்".. மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கரின் கணக்கை 1 மணி நேரம் முடக்கிய ட்விட்டர்.. கடும் மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் நிறுவனம் ஒரு மணி நேரம் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று மத்திய அரசு சட்ட பாதுகாப்பை விலக்கிக் கொண்டு உள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையில் கடும் மோதல் நிலவி வருகிறது.

புதிய ஐடி விதிகளின் படி ட்விட்டர் நிறுவனம் இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இந்த விதியை ட்விட்டர் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை . இந்த நிலையில் ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி ட்விட்டர் நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.

மோதல்

மோதல்

மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் மோதல் நிலவி வரும் நிலையில், இன்று மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் நிறுவனம் ஒரு மணி நேரம் முடக்கியது. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாந்த் தனது கணக்கை இன்று திறந்த போது, என்னுடைய கணக்கில் இன்று நான் லாக் இன் செய்த போது என்னால் உள்ளே செல்ல முடியவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கணக்கு

கணக்கு

ட்விட்டர் நிறுவனம் இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத்திற்கு அளித்த விளக்கத்தில், உங்களின் ட்விட்டர் கணக்கு காப்பிரைட் புகார் காரணமாக லாக் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ட்விட்டில் காப்பிரைட் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் லாக் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் செய்த காப்பிரைட் ட்விட்டை நீக்கிவிடுவோம். இதேபோன்ற காப்பிரைட் முறைகேடு, அத்துமீறல் தொடர்ந்தால் உங்களின் கணக்கு மொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

லாக்

லாக்

அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து அமைச்சரின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொங்கியது.காப்பிரைட்டை அத்துமீற கூடிய ட்விட் எதையும் இனி செய்ய கூடாது. மீறி செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ட்விட்டர் நிறுவனத்தின் இந்த செயலை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

முடக்கம்

முடக்கம்

இது தொடர்பாக அவர் கூ செயலில் செய்த போஸ்டில், தகுந்த முன்னறிப்பு இன்றி என்னுடைய கணக்கை ட்விட்டர் நிறுவனம் லாக் செய்தது இந்திய ஐடி விதிகளுக்கு எதிரானது. ட்விட்டர் நிறுவனத்தின் தன்னிச்சையான போக்கிற்கு எதிரான நான் அளித்த பேட்டிகளை பகிர்ந்த காரணத்தால் ட்விட்டர் நிறுவனம் என் கணக்கை லாக் செய்துள்ளது. டிவி பேட்டிகளை பகிர்ந்த காரணத்தால் என் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது.

பேட்டி

பேட்டி

இதற்கு முன் டிவி பேட்டிகளை பகிர்ந்த போது இப்படி காப்பிரைட் கிளைம் செய்தது இல்லை. ட்விட்டர் இப்படி தன்னிசையாக விதிகளை மதிக்காமல் செயல்பட நினைப்பதால்தான், அவர்கள் ஐடி விதிகளை பின்பற்றவில்லை. ட்விட்டர் நிறுவனம் பேச்சு உரிமையை காக்க விரும்பவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது.

கொள்கை

கொள்கை

ட்விட்டர் நிறுவனம் தங்களின் கொள்கைக்கு எதிராக பேசுபவர்களின் கணக்குகளை முடக்குகிறது. ட்விட்டரின் இந்த போக்கு பேச்சு உரிமைக்கு எதிரானது. இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவின் விதிகளை பின்பற்ற வேண்டும், என்று அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+