நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு.. ரிசல்டை பார்ப்பது எப்படி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் சர்ச்சையான நிலையில், அவை நீக்கப்பட்டு கருணை மார்க் பெற்றவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே இந்த மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முகமையின் பக்கத்தில் இந்த தேர்வு முடிவுகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.

இருப்பினும், இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது பல சர்ச்சைகள் அதைச் சுற்றி நிலவுகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே நீட் தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியானது சர்ச்சையானது.
சர்ச்சை: அதேபோல கடந்தாண்டு 2 பேர் மட்டுமே 720க்கு 720 என்று முழு மார்க் பெற்ற நிலையில், இந்தாண்டு மொத்தம் 67 பேர் முழு மார்க் பெற்றுள்ளனர். இதுவும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது ஒரு பக்கம் இருக்க நீட் தேர்வில்ல வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களும் சர்ச்சையானது. அதாவது இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் கருணை மார்க் வழங்கப்பட்டது.
டாப் மார்க் பெற்ற 67 பேரில் 44 பேர் இந்த கேள்விக்குக் கருனை மார்க் பெற்றதே விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதுபோல 1563 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் திரும்பப் பெறுவதாகவும் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மறுதேர்வு: இதையடுத்து கருணை மதிப்பெண்கள் பெற்ற இந்த 1563 மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 23ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் இதில் அந்த 1563 மாணவர்களுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கருணை மதிப்பெண்கள் கழிக்கப்பட்ட மார்க் போதும் என்பவர் கலந்து கொள்ளத் தேவையில்லை. அதை மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
ரிசல்ட் வெளியீடு: இதையடுத்து ஜூன் 23ம் தேதி நடந்த மறுதேர்வில் 813 மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்த பிறகு மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் நடைபெற்றன. அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், மறுதேர்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற தளத்திற்குச் சென்று நீட் தேர்வு முடிவுகளைச் சரி பார்த்துக் கொள்ளலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications