2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் கார்டுகள் திடீர் ரத்து.. UIDAI அதிரடியின் பின்னணி.. காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் திடீரென்று 2 கோடிக்கும் அதிகமானவர்களின் ஆதார் கார்டுகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. அதாவது ஆதார் டேட்டாவின் துல்லிய தன்மையை பராமரிக்கும் வகையில் நாடு முழுவதும் இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஆதார் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

நம் நாட்டில் உள்ள முக்கிய அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார் (Aadhaar). இதனை UIDAI எனும் Unique Identification Authority of India என்ற அமைப்பு வழங்கி வருகிறது. இதனை தமிழில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் என்று அழைப்பார்கள்.

aadhaar card uidai

மத்திய அரசின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டில் பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் வகையில் தனி அடையாள எண் ஆதார் கார்டு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு பெற குழந்தைகளின் கைரேகை, கண்விழி உள்ளிட்டவை பயன்படுத்தபடுகிறது.

இதன்மூலம் ஒருவரின் அடையாளத்தை எளிதாக அடையாளம் காண முடியும். இதற்கிடையே தான் திடீரென்று நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதார் எண்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. அதாவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆதார் எண்கள் அனைத்துமே இறந்தவர்களுக்கு சொந்தமானதாகும்.

அதாவது நம் நாட்டில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கார்டு அடையாள அட்டையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி முதியவர்கள் பலரும் நிதி உதவி திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இப்படியான சூழலில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின் ஆதார் கார்டை நீக்கம் செய்யாமல் பலரும் அதனை பயன்படுத்தி முறைகேடு செய்து வருகின்றனர்.

இதனால் ஆதார் டேட்டாவை துல்லியமாக்கவும், இறந்தவர்களின் ஆதார் எண்களை செயலிழக்க செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பொது விநியோக முறை, தேசிய சமூக உதவித் திட்டம் உள்ளிட்டவற்றில் இறந்தவர்களின் தரவுகளை UIDAI பெற்று அதன்வழியாக 2 கோடிக்கும் அதிகமானவர்களின் ஆதார் எண்களை செயலிழக்க செய்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது சிவில் பதிவு முறையை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் யாராவது இறந்தால் அதனை இணையதளம் மூலமாக மக்கள் பதிவு செய்யலாம். myAadhaar போர்ட்டலில் இறந்தவர்களின் சான்று உள்ளிட்ட விவரங்களை மக்கள் அளித்தால் போதும். அதனை பரிசீலனை செய்து ஆதார் ஆணையம் நீக்கம் செய்து விடும். இந்த திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தற்போதும் UIDAI கேட்டு கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+