பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா?
இன்று காலை நடக்கிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பேராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.. விவசாயிகளுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.. ஆனால், இவை எல்லாமே தோல்வியில் முடிந்துவிட்டது.. மற்றொருபுறம் இவர்களின் போராட்டம் தீவிரமடைந்தும் வருகிறது.
ஒருபக்கம் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் திரண்டு வருகின்றனர்.. மற்றொரு பக்கம், டெல்லியை அடையும் சாலைகளையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் வேளாண் சட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியானது.. அதுமட்டுமல்ல, கொரோனா தடுப்பூசி விநியோகம், 4ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11.25 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதுமட்டுமல்ல, குஜராத்தில் நேற்று பிரதமர் பேசும்போது, கடந்த காலங்களில் விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிசகளும் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.. அத்துடன் விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications