188 கோடி டோஸ் வேக்சின் தேவை.. 51 கோடி விரைவில் ரெடி.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்
டெல்லி: இந்தியாவில் 18+ வயது கொண்டவர்கள் எல்லோருக்கும் 2 டோஸ் வேக்சின் போடுவதற்கு மொத்தம் 188 கோடி டோஸ் வேக்சின் தேவைப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மத்திய அரசின் கொரோனா வேக்சின் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து வந்தது. முக்கியமாக போதிய வேக்சின் ஆர்டர் செய்யாததும், மாநிலங்களுக்கு போதிய வேக்சின் வழங்காததும், இலவச வேக்சின் வழங்காததையும் விமர்சித்து வந்தது.
மத்திய அரசின் வேக்சின் கொள்கை நியாயமற்றது, பகுத்தறிவற்றது என்றது உச்ச நீதிமன்றம் சரமாரியாக விமர்சனம் செய்தது. மத்திய அரசு தனது வேக்சின் கொள்முதலின் முழு விவரத்தையும் தேதி வாரியாக பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும், வேக்சின் கொள்கை குறித்தும் 2 வாரங்களில் பிரமாண பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாற்றம்
இதையடுத்து மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

பத்திரம்
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு தனது வேக்சின் கொள்கை தொடர்பாக 375 பக்கங்கள் கொண்ட புதிய பிரமாணபாத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தியாவில் 18+ வயது கொண்டவர்கள் எல்லோருக்கும் 2 டோஸ் வேக்சின் போடுவதற்கு மொத்தம் 188 கோடி டோஸ் வேக்சின் தேவைப்படும். 18 வயதுக்கு மேற்பட்டோர் 93-94 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு 2 டோஸ் வேக்சின் போடுவதற்கு மொத்தம் 188 கோடி டோஸ் வேக்சின் தேவைப்படும்

எவ்வளவு
இதில் ஜூலை 31க்குள் 51.6 கோடி டோஸ் வேக்சின் தயாராகிவிடும். மீதமுள்ள 135 கோடி வேக்சின் வாங்க வேண்டும். பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட், ஸ்புட்னிக் வி, சைடஸ் கேடில்லா, பயோலாஜிக்கல் இ உள்ளிட்ட வேக்சின்கள் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக வாங்கப்படும். இதனால் 135 வேக்சின் தேவை பூர்த்தியாகும். இந்தியாவில் 5.6% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
Recommended Video

எல்லோருக்கும்
வேக்சின் போடுவது 18+ வயது கொண்ட எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது. கோவின் செயலி கட்டாயம் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லோரும் நாட்டில் சமமாக வேக்சின் பெற முடியும். கிராமத்தில் உள்ளவர்களும் வேக்சின் பெற முடியும். ஜூன் 25 வரை இந்தியாவில் 31 கோடி டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதில் 56.24% டோஸ் கிராமங்களில் போடப்பட்டது ஆகும்.

இலவசம்
இந்தியாவில் 18+ வயது கொண்ட எல்லோருக்கும் இலவச வேக்சின் போடப்படும் என்றும் மத்திய அரசு தனது பிரமாண பாத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக கோவின் தளத்தின் பயன்பாடு குறித்தும், இலவசமாக வேக்சின் கொடுக்காதது குறித்தும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்து இருந்தது. இந்த நிலையில் விமர்சனங்கள் அனைத்தையும் சரி செய்யும் விதமாக மத்திய அரசு தனது கொள்கையை மாற்றி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 30ல் உச்ச நீதிமன்றத்தில் நடக்கும்.











Click it and Unblock the Notifications