"ரொம்ப தப்புங்க! பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை!" அமித் ஷா பளீச்! அப்படியே பாக். பக்கம் திரும்பி! பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் பயங்கரவாதிகள் நிதி திரட்டுவதைத் தடுப்பது தொடர்பாகக் கூட்டத்தில், அமைச்சர் அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் தான் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க சர்வதேச நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் கூட பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 ஆலோசனை

ஆலோசனை

இந்த நடவடிக்கைகளால் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு மோசமான பயங்கரவாத தாக்குதலும் நடக்கவில்லை. இதற்கிடையே டெல்லியில் பயங்கரவாதிகள் நிதி திரட்டுவதைத் தடுப்பது தொடர்பாகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பயங்கரவாதம் குறித்தும் அதைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

 அமைச்சர் அமித் ஷா

அமைச்சர் அமித் ஷா

பயங்கரவாதத்தை நிதியுதவி செய்வது என்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என்று குறிப்பிட்ட அமித் ஷா, பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். வன்முறை செயல்களில் ஈடுபடவும் இளைஞர்களைத் தவறான வழியில் கொண்டு செல்லவும் நிதி திரட்டவும் பயங்கரவாதிகள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருவதாக அமைச்ச அமித் ஷா வேதனை தெரிவித்தார்.

 ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

மேலும், மோசமான கருத்துகளைப் பரப்பவும் தங்கள் அடையாளங்களை மறைக்கவும் டார்க்நெட்டை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் பயங்கரவாதம் மட்டும் தான்.ஆனால் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என்று நான் நம்புகிறேன்..

 நிதி செல்வதை தடுக்க நடவடிக்கை

நிதி செல்வதை தடுக்க நடவடிக்கை

ஏனென்றால் இப்படிக் கிடைக்கும் நிதியில் இருந்து தான் பயங்கரவாதமே வளர்க்கிறது. மேலும், இது பொருளாதார ரீதியாகவும் கூட நமது நாட்டை மிகக் கடுமையாகப் பாதிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள, பாதுகாப்பு கட்டமைப்பை நாம் வலுப்படுத்தி உள்ளோம். மேலும், நிதி செல்வதைத் தடுக்க சட்ட மற்றும் நிதி அமைப்புகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

 குறிப்பிட்ட நாடுகள்

குறிப்பிட்ட நாடுகள்

ஒட்டுமொத்த உலக நாடுகளும் இணைந்து போராடினால் மட்டுமே பயங்கரவாதத்தைத் தடுக்க முடியும். இதற்காக உலக நாடுகள் ஒன்றாக இணைந்து போராடி வருகிறது. இருப்பினும், நமது இந்த கூட்டுத் தீர்மானத்தைக் குலைக்கும் வகையிலும் கூட சில நாடுகள் செயல்பட்டே வருகின்றன.. சில நாடுகள் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பு தருவதையும் அடைக்கலம் தருவதையும் பார்த்துள்ளோம்.

 பாகிஸ்தான் மீது அட்டாக்

பாகிஸ்தான் மீது அட்டாக்

ஒரு பயங்கரவாதியைப் பாதுகாப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குச் சமம். இத்தனை எண்ணம் கொண்ட நாடுகளை நாம் வெல்ல விடக் கூடாது" என்று அமித் ஷா பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடி பேசினார். கடந்த காலங்களிலும் கூட ஒசாமா பின்லேடன் உட்பட பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவே உலக நாடுகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+