சாட்டையை சுழற்றும் பிசிஐ.. நோ அவதூறு, நோ ஆபாசம்.. ஊடக சுதந்திரத்தில் அரசு தலையிடாது: மத்திய அமைச்சர்
டெல்லி: பத்திரிகை செயல்பாட்டில் அரசு தலையிடாது என் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களாக ஊடகங்கள் குறித்த சலசலப்புகள் மேலெழுந்து வந்திருந்த நிலையில், இந்த பதில் அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
ஊடகங்களுக்கு ஏதேனும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறதா? என்று சிவசேனா எம்பி தேசாய் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1) குடிமக்களின் பேச்சு மற்றும் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதே பிரிவு 19(2) நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் போன்றவை குறித்து விரிவாக பேசுகிறது.
இந்த பிரிவுகளின் கீழ்தான் பத்திரிகை சுதந்திரம், அதன் செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) கண்காணிக்கிறது. இது ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதுதான் ஊடக செயல்பாடுகளை உண்ணிப்பாக கவனிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளின் சுதந்திரத்தை பாதுகாப்பதோடு, அதன் தரத்தையும் மேம்படுத்தவும் செயலாற்றி வருகிறது. இருப்பினும் மேற்கூறிய சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(2) ஆகியவற்றைதான் மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியும்.

மற்றபடி ஊடகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தாது. ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள், நெறிமுறைகளை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாதான் விதிக்கிறது. அதேபோல சில ஆக்கப்பூர்வமான வழக்காட்டுதல்களையும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாதான் வழங்குகிறது. கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 இன் கீழ் அனைத்து டிவி சேனல்களும் நிரல் குறியீடுகள் எனப்படும் Programme Code-ஐ கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். இதில் அவதூறோ, ஆபாசமோ இருக்கக்கூடாது என்று PCI கறாராக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு இவ்வளவு விளக்கம் கொடுப்பதற்கு பின்னணி காரணமும் ஒன்று இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக பிபிசி சர்ச்சை நாடு முழுவதும் சுழலாய் சுழற்றியடித்துள்ளது. அதாவது, குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படத்தை தயாரித்தது. அந்த படத்தில் அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி குறித்து கூறியுள்ள தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் இந்த படம் நாடு முழுவதும் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த படத்தை மக்கள் மத்தியில் திரையிடத் தொடங்கின. கல்வி நிலையங்களில் SFI போன்ற இடதுசாரி ஜனநாயக அமைப்புகளும் இந்த பணியை தீவிரமாக மேற்கொண்டன. ஆனால் இதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் எதுவும் ஒப்புதல் அளிக்கவில்லை.
மீறி திரையிட்ட மாணவர்கள் கல்வி நிலையத்தின் நிர்வாகத்திலிருந்து சிக்கல்களை எதிர்கொண்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த சலசலப்புக்கிடையில் வருமான வரித்துறையினர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது. இதுதான் நேற்று சிவசேனா எம்பி மேற்குறிப்பிட்ட கேள்வியை எழுப்ப காரணம். இதனையடுத்து மத்திய அமைச்சர் கூறியுள்ள பதில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications