Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மாஃபியா கையில் வக்பு வாரியம்.. சட்டத்திருத்தத்திற்கு காரணம் இதுதான்!” மத்திய அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சி எம்பிக்களால் கடும் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், வக்பு வாரியம் மாஃபியாவால் கைப்பற்றப்பட்டது என்றும் எனவேதான் அரசு தலையிடுகிறது எனவும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

Waqf bill waqf bill amendment Lok Sabha Parliament

இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல திருத்தங்கள் வக்பு வாரியத்திற்கு எதிரான, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், "வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட இந்த மசோதா பரிந்துரைக்கவில்லை.

இந்த சட்டத்திருத்தம் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில், உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வக்பு வாரியம் மாஃபியாவால் கைப்பற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்கள் அரசுக்கு வந்தது. இதனையடுத்துதான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்றும் தெளிவாக சொல்வதெனில், இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்ய, கடந்த 2005ம் ஆண்டில், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அமைத்திருந்தார். இந்த 'சச்சார் கமிட்டி' 2006ல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தற்போது இந்த சட்ட திருத்த மசோதாவை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரை தொடர்ந்து, பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பியும், மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார்.

"இந்த மசோதா அனைவரையும் உள்ளடக்கியது. மத பிளவுகளை இது ஊக்குவிக்கவில்லை. வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவே இந்த சட்டம் இயற்றப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கோயில்களுடன் வக்பு வாரியத்தை ஒப்பிடுகின்றனர். இதன் மூலம் முக்கிய பிரச்சனையில் இருந்து அவர்கள் திசைதிருப்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+