கீழடி ஆய்வறிக்கை நிராகரிப்பு? அமர்நாத் பணியிட மாற்றம் ஏன்? மத்திய அமைச்சர் கொடுத்த முக்கிய விளக்கம்!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் கீழடி தொடர்பாக முக்கியமான விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நிலையில், மத்தியக் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இதற்குப் பதிலளித்துள்ளார். கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு நடந்த போது அமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில் தான், நகர நாகரிகத்திற்கான சான்றுகள் அடங்கிய தொல்லியல் பொருட்கள் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

அமர்நாத் ராமகிருஷ்ணன்
அப்போது திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் தமிழகத்திலிருந்து டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு அப்போதே தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும், அவர் மீண்டும் தமிழகத்தில் பணியமர்த்தப்படவில்லை. இதற்கிடையே கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கைகளை அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார்.
இருப்பினும், மத்திய அரசு இதுவரை அந்த அறிக்கைகளை வெளியிடவில்லை. இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ள அமர்நாத்திற்கு தொல்லியல் துறை கடிதம் அனுப்பியது. அதில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரையிலான ஆய்வுகளுக்குரிய ஆதாரங்கள் கோரப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு அரசியல்
ஆனால், கூடுதல் ஆதாரங்களோ அல்லது திருத்தங்களோ தேவையில்லை என்று அமர்நாத் பதில் தொல்லியல் துறைக்குக் கடிதம் எழுதினார். இந்தப் பதில் கடிதம் அனுப்பிய சில நாட்களிலேயே அவர் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து அவர் நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கும் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
திமுக எம்பி கேள்வி
இப்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அங்கும் கீழடி விவகாரம் எதிரொலித்துள்ளது. கீழடி விவகாரம் தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுத்துப்பூர்வமாகச் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். கீழடி குறித்துத் தரப்பட்ட ஆய்வறிக்கையை மத்திய அரசு பகுப்பாய்வு செய்ததா? கீழடி அறிக்கையை மத்தியத் தொல்லியல் துறை நிராகரித்தது ஏன்? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும், முன்னணித் தொல்பொருள் ஆய்வாளரைப் பணிமாற்றம் செய்ய என்ன காரணம் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
மத்திய அரசு நிராகரிக்கவில்லை
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியக் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார். கீழடி தொல்பொருள் ஆய்வறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை என்று கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், "கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். இந்த ஆய்வறிக்கையை நிராகரிக்கவில்லை.. இதில் இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை அவ்வளவே!" என்றார்.
அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிடமாற்றம்
இப்போது கீழடி தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு அரசின் வசமே உள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் மக்களவையில் அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், அமைச்சர் ஷெகாவத் தனது பதிலில் அமர்நாத் ராமகிருஷ்ணா பணிமாற்றம் குறித்தும் விளக்கமளித்துள்ளார். அதாவது நிர்வாகம் சார்ந்த முடிவாகவே அமர்நாத் ராமகிருஷ்ணா பணிமாற்றம் இருப்பதாகவும் அதில் வேறு எந்தவொரு காரணமும் இல்லை என்றும் அமைச்சர் ஷெகாவத் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications