“ஓகே” சொல்லிட்டாங்க.. பெட்ரோல், டீசல் விலை குறையுதா? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கொடுத்த “அப்டேட்”
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது குறித்து விளக்கமளித்து இருக்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே கடுமையாக உயர்வை சந்தித்து தற்போது ரூ.100 முதல் ரூ.110 அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக விலை மாற்றமின்றி தொடர்ந்து வந்தது.
அதே நேரம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் கடுமையாக சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கவனித்து வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை நிலையாக இருந்து, அடுத்த காலாண்டு எண்ணெய் நிறுவனங்கள் நிலையும் சரியாக இருந்தால் இந்த சிக்கலை கவனிக்கும்.
இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் இடத்தில் நான் இல்லை. நாங்கள் அவர்களுடன் பயணிக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அடுத்த காலாண்டில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளன. அவர்கள் மேலும் சில இழப்புகளை ஈடுகட்டி இருக்கிறார்கள்.

அவர்கள் சிறந்த கார்ப்பரேட் குடிமகன்களாக உள்ளார்கள். அவர்களுடன் இணைந்து நாங்கள் பயணித்து வருகிறோம். நுகர்வோர்கள் எந்த விதமான சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்யும்." என்றார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் இன்று உயர்ந்தது.
அதே நேரம் இந்த விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. விலை மாற்றமின்றி தொடர்ந்து வந்தாலும், தற்போது இருக்கும் அதிக விலை எப்போது குறையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications