‛சஸ்பெண்ட்’.. 45 நாள் கெடுவோடு இந்தியாவை எச்சரித்த உலக மல்யுத்த கூட்டமைப்பு! வீராங்கணைகளுக்கு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததற்கு ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நடவடிக்கை இல்லாத பட்சத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்யும் என 45 நாள் கெடுவிதித்து பகீரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் புதிய சிக்கல் உருவாகி உள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும், பாஜக எம்பியாகவும் இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இவர் வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் மத்திய அரசும், போலீசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என ஒரு மாதத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரியில் போராட்டத்தை தொடங்கினர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும் கைது நடவடிக்கை இல்லை.

united-world-wrestling-issues-a-strong-statement-on-wrestlers-protest-its-said-to-suspend-india

இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. கடந்த 28 ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நியாயம் கேட்டு பேரணி புறப்பட்ட வீரர், வீராங்கணைகளும் தடுத்து நிறுத்தப்பட்டு தரதரெவென இழுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பெரிய அளவில் சர்ச்சையானது.

இந்நிலையில் தான் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை ஹரித்வார் கங்கை ஆற்றில் வீசி எறிந்து எதிர்ப்பை காட்ட முயன்றனர். பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், விஜேஷ் போகத் உள்பட பிற மல்யுத்த வீரர், வீராங்கணைகள் கங்கை ஆற்றுக்கு சென்று கதறி அழுதனர். விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் வந்து 5 நாள் அவகாசம் வழங்கும்படி கேட்டு பதக்கங்களை பெற்று கொண்டார். இதையடுத்து வீரர், வீராங்கணைகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில் தான் ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்த விவகாரத்தில் தலையீட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளதோடு பகிரங்கமாக இந்தியாவை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரின் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர். இதனை உலக மல்யுத்த கூட்டமைப்பு கவனித்து வருவதோடு, அதுதொடர்பாக கவலை கொள்கிறது. முதலிலேயே பிரச்சனைக்கு தீர்வு கண்டு இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை அதிக கவலையை தருகிறது. மல்யுத்த வீரர், வீராங்கணைகள் பேரணி செல்ல முயன்றபோது கைது செய்தது மற்றும் ஒரு மாதமாக அவர்கள் போராடிய இடத்தில் இருந்து வெளியேற்றியதும் துயரை கொடுத்துள்ளது.

இந்த செயல்களுக்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது மல்யுத்த சங்க தலைவர் மீதனா விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. மேலும் இந்த பிரச்சனையின் தொடக்கத்தில் இருந்து ஏற்கனவே செய்ததை போல் உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்த வீரர்களுடன் சந்திப்பை நடத்தி அவர்களின் பிரச்சனையை கேட்றிந்து பாதுகாப்பு பற்றியும் ஆலோசனை நடத்தும். அதோடு மல்யுத்த வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

இறுதியாக ஒருங்கிணைந்த உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐஓஏ) மற்றும் இந்திய மல்யுத்த சம்மேளனம் ஆகியவற்றின் ஒக் கமிட்டியிடம் இருந்து அடுத்த பொது கூட்டமைப்பு தேர்வு குறித்து கூடுதல் தகவல்கள் கோரும். இதற்கு 45 நாள் கெடு வழங்கப்படும். இதனை செய்ய தவறும் பட்சத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய மல்யுத்த சம்மேளத்தை சஸ்பெண்ட் செய்யும். மேலும் மல்யுத்த வீரர்களை ‛நியூட்ரல் பிளாக்' உடன் போட்டியில் பங்கேற்க செய்யும். இந்த விஷயத்தில் ஏற்கனவே உலக மல்யுத்த கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டது. இது நினைவூட்டப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மல்யுத்த வீரர், வீராங்கணை விவகாரத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+