டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்லாக் 3.0.. இனி இரவு நேர லாக்டவுன் கிடையாது.. அமலுக்கு வரும் தளர்வு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அன்லாக் 3.0 விதிமுறை மூலம் இனி இரவு நேர லாக்டவுன் கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா அன்லாக் 3.0 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட அன்லாக் செயல்பாடுகள் ஜூலை 31ம் தேதியோடு முடிவிற்கு வருகிறது. இதனால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. இதில் பல முக்கியமான தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

Unlock 3.0 announced: Night Curfew removed all over India

இந்த லாக்டவுன் 3.0 மூலம் இரவு நேர லாக்டவுன் மொத்தமாக நீக்கப்படுகிறது. அதன்படி இதுவரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பல்வேறு மாநிலங்களில் லாக்டவுன் அமலில் உள்ளது. சில மாநிலங்களில் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை லாக்டவுன் உள்ளது.

தற்போது இந்த இரவு நேர லாக்டவுனை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் மக்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

அன்லாக் 3.0.. பள்ளிகள், தியேட்டர்கள் இயங்காது.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன்!அன்லாக் 3.0.. பள்ளிகள், தியேட்டர்கள் இயங்காது.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன்!

ஆனால் 65 வயதுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள் வெளியே செல்ல தொடர்ந்து கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

English summary
Unlock 3.0 announced: Night Curfew removed all over India from August 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X