கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள்.. உத்தரப் பிரதேசம் முதலிடம்! தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?
டெல்லி: தேசிய அளவில் கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், உத்தரப் பிரதேசம் இதில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதாவது இந்த மாநிலத்தில்தான் அதிக அளவிலான மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றன.
நடப்பாண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதியன்று தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் எம்பி ஒருவர், கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களின் பட்டியலை கேட்டிருந்தார். இதையடுத்து நேற்று மத்திய அரசு இந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இதில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, இந்த மாநிலம்தான் அதிக அளவில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை கொண்டிருக்கிறது.

இந்த மாநிலத்தில் ராம்பூர், சீதாபூர், சுல்தான்பூர், முசாபர் நகர், உனாவ் என மொத்தம் 41 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அடையாளம் கண்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் இருக்கிறது. அப்படியெனில் சரிபாதிக்கும் அதிகமான மாவட்டங்கள் கல்வி அறிவு பெறுவதில் பின்தங்கி இருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 52 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 39 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதாக யுஜிசி அடையாளம் கண்டிருக்கிறது. இதுவும் சரிபாதி எண்ணிக்கைக்கு மேலானதாகும். மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் 30 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றன. அதேபோல நான்காவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றன.
அதாவது, அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக யுஜிசி அடையாளம் கண்டுள்ளது.
அதேபோல இந்த பட்டியலில் கேரளா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் வெறும் 4 மாவட்டங்கள்தான் கல்வியில் பின்தங்கியுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 12 மாநிலங்களில் 5 மாநிலங்கள்தான் கல்வியில் பின் தங்கியுள்ளன. இதற்கெல்லாம் ஹைலைட்டாக நாகலாந்து மாநிலம் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 16 மாவட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரேயொரு மாவட்டம் மட்டுமே கல்வியில் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications