பாலூட்டும் தாய்மார்கள், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்... எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?
டெல்லி: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மூன்று மாதங்களுக்குப் பின்னர் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 2ஆம் டோஸ் எடுத்துக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி
அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துத் தெளிவான நெறிமுறைகள் வெளியிடப்படாமல் இருந்தன. இதுவரை ஒவ்வொரு நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப பரிசோதனை செய்து, மருத்துவர்கள் 3 முதல் 6 மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தி வந்தன.

குணமடைந்தவர்கள்குணமடைந்தவர்கள்
இந்நிலையில், NEGVAC எனப்படும் கோவிட் 19 தடுப்பூசி பணிகளுக்கான தேசிய மருத்துவ வல்லுநர் குழு புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம், அதேபோல முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு 2ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.

பாலூட்டும் தாய்மார்கள்
அதேபோல வேறு உடல்நிலை பாதிப்புகள் காரணமாகச் சிகிச்சை பெற்று வருபவர்கள் 4 முதல் 8 வாரங்களுக்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஒத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

மத்திய அரசு
முன்னதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரித்திருந்தது. 8 முதல் 12 வாரங்களாக இருந்த இடைவெளியை மத்திய அரசு 12 முதல் 16 வாரங்களாக அதிகரித்தது. அதேநேரம் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியில் எவ்வித மாற்றமும் இல்லை. 4 முதல் 6 வார இடைவெளியில் 2ஆவது கோவாக்சின் டோஸை ஒருவர் எடுத்துக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications