சைக்கிள் டூ மகிந்திரா தார்! சூர்யவன்ஷி சதத்தால் மாறிப்போன புலம்பெயர் தொழிலாளி லைஃப்.. எப்டி பாருங்க

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 14 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி அடித்த சதத்தினால், புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையே மாறிப்போயுள்ளது. டிரீம் லெவல் ( fantasy gaming) என்ற செயலி மூலமாக 1.5 கோடி ரூபாயும், ஒரு மகிந்திரா தார் காரும் பரிசாக அடித்து இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுள்ளார் அந்த தொழிலாளி. அந்த செயலியில் கேப்டனாக சூர்யவன்ஷியையும், துணை கேப்டனாக சுப்மன் கில்லையும் போட்டிருந்தாராம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை ஐபிஎல் போட்டித்தொடர் தற்போது எட்டியுள்ளது. ஐபிஎல்லில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு தொடரில் துவக்கத்தில் இருந்தே தடுமாறி வருகிறது. தற்போது, பிளே ஆஃப்பிற்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

ipl 2025 cricket car

சூர்யவன்சி அடித்த சதம்

அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியியும் பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது. மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க மல்லுக்கட்டி வருகின்றன. ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் தற்போது கற்பனை அணியை உருவாக்கும் கேமிங் செயலிகளிளும் அதிகமாக பிரபலமாக உள்ளது.

இத்தகைய கேமிங் செயலியில் ரசிகர்கள் தங்கள் பிடித்த வீர்ர்கள், யாரெல்லம் சிறப்பாக விளையாடுவார்கள் என கருதுகிறார்களோ அவர்களை வைத்து இரு அணிகளையும் சேர்த்து கற்பனை அணியை உருவாக்குவார்கள். இதில், அவர்கள் உருவாக்கிய அணி அப்படியே வெற்றி பெற்றால் பல கோடிகள் பரிசு கிடைக்கின்றன.

மகிந்திரா தார் கார் பரிசு

இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கனவு அணியை உருவாக்கும் செயலி மூலமாக ஜார்க்கண்ட்டை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளிக்கு கோடிகள் கொட்டியிருக்கிறது. ஜார்க்கண்ட்டில் கிரிதிஹ் பகுதியை சேர்ந்தவர் தண்டுன் ராய். இவருக்கு கற்பனை அணியை உருவாக்கும் செயலியில் விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த செயலியில் விளையாடி வரும் தண்டவுன் ராய், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்த 14 வயது வீரர் வைபவ் சூரியவன்ஷியை கேப்டனாகவும் சுப்மன் கில்லை துணை கேப்டனாகவும் போட்டாராம். இருவருமே அசாத்தியமாக விளையாடி ரன்களை குவித்ததால் தண்டவ்டுன் ராய்க்கு 1.5 கோடி ரூபாயும் ஒரு மகிந்திரா தார் காரும் பரிசாக அடித்து இருக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து

இதனால், மகிழ்ச்சியில் திளைத்துள்ள தண்டவுன் ராய் கூறுகையில், தற்போது நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். பல வருட கடின உழைப்பு எனக்கு பலன் கொடுத்து இருக்கிறது. எனது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்கள் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இனி வேலை தேடி வேறு மாநிலத்திற்கு நான் செல்ல வேண்டியது இல்லை. சொந்த ஊரில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட தொகையை சேமிப்பாகவும், மீதமுள்ளவற்றை சொத்துக்களில் முதலீடு செய்யவும் இருக்கிறேன்" என்றார்.

14 வயது இளம் வீரர் சூர்யவன்ஷியில் சதத்தால் ஒரே நாளில் ஜார்க்கண்ட் புலம் பெயர் தொழிலாளியின் வாழ்க்கையே மாறிப்போச்சே என்று நெட்டிசன்களும் கூறி வருகிறார்கள். சில நெட்டிசன்கள் கூறுகையில், இதுபோன்ற கேமிங் செயலிகள் எல்லாம் சூதாட்டம் போன்றதுதான். எனக்கு தெரிந்த பலரும் ஆண்டுக்கணக்கில் விளையாடி பல ஆயிரங்களை இழந்துதான் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர்.

செய்தி மட்டுமே

மேலே கொடுக்கபட்டுள்ள தகவல் ஒரு செய்தி மட்டுமே. கற்பனை அணி ( fantasy gaming) கேமிங்கை ஊக்குவிக்கும் வகையிலான தகவல் கிடையாது. இதுபோன்ற கேமிங் செயலிகளுக்கு மக்கள் அடிமையாகி பண இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+