Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் பிளாஸ்டிக் பாக்கெட்டோடு சூடாக்கப்பட்ட ரொட்டி! பயணி அதிர்ச்சி!
டெல்லி: வந்தே பாரத் ரயிலில் ரொட்டியை பிளாஸ்டிக் பாக்கெட்டில் சூடாக்கி கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பயணி இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது.
அவனி பன்சால் என்ற பெண் கடந்த 18ஆம் தேதி வந்தே பாரத் ரயிலில் அலகாபாத் டூ டெல்லி சென்றார். அது போல் டெல்லியில் இருந்து அலகாபாத்திற்கு கடந்த 17ஆம் தேதி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்திருந்தார்.

இரு ரயில்களிலும் சாப்பாட்டில் ரொட்டி (புல்கா) மற்றும் கச்சோரி, சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டில் சுடச்சுட கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனி, ரயில் ஊழியரை அழைத்து கேட்டார்.
"இந்த உணவை மைக்ரோவேவில் சூடாக்கினீங்களா?" என கேட்டதற்கு அந்த ஊழியர் சொன்னார், "குளிர்ச்சியா வேணுமா?" என கேட்டார்.
அதற்கு அந்த பெண், "இல்ல, ஆனா இந்த பாக்கெட்டில் மைக்ரோவேவ் செய்யலாம்னு எங்கே எழுதியிருக்கு? 'குளிர்ந்த இடத்தில் வைக்கவும் (Store it in cool place)'னு மட்டுமே இருக்கு. பிளாஸ்டிக் சூடாக்கினா உணவுக்கு கெமிக்கல் கலந்து உடம்புக்கு தீங்கு வரலாமே?" என்று கேள்வி எழுப்பினார்.
பாக்கெட்டில் மைக்ரோவேவ் செய்யலாம் என்று எந்த அனுமதியும், சான்றிதழும் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். "லட்சக்கணக்கான பயணிகளோட உடல்நலத்தோடு விளையாடுறீங்களே" என்று கோபமாக கூறினார்.
ராஜதானியில் பசி காரணமாக சாப்பிட்டதாகவும், வந்தே பாரத்தில் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்தனர். "பிளாஸ்டிக் உருகி உணவில் கலந்துடுமோ?" "ரயிலில் தண்ணீர் தவிர வேற எதுவும் வாங்க வேண்டாம்" என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
சிலர் "விமானத்தில் எப்படி செய்கிறார்களோ அப்படி பயிற்சி கொடுங்கள்" என்றும் சொன்னார்கள். இந்த நிலையில்
IRCTC அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிலளித்தது.
"மேடம், உங்கள் PNR எண் மற்றும் மொபைல் எண்ணை கொடுங்கள். உடனடியாக பார்த்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்று கூறியது.
இது போன்ற பிரச்சினை உணவு தயாரிப்பு முறையில் கவனம் செலுத்த வேண்டியதை காட்டுகிறது.
பயணிகள் ஆரோக்கியம் மிக முக்கியம். IRCTC இதை சரி செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இனி ரயில் பயணத்தில் உணவு எப்படி தயாராகிறது என்பதை கவனமாக பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications