"விசாரிப்பது கடினம்.." மணிப்பூர் விவகாரம்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து! விஷயம் என்ன
டெல்லி: மணிப்பூரில் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிப்பது கடினம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. கடந்த மே முதல் வாரத்தில் தொடங்கிய வன்முறை இப்போது வரை தொடர்ந்தே வருகிறது.
குறிப்பாக அங்கே மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைப்பதாக இருந்தது.

மணிப்பூர் விவகாரம்: இதுபோன்ற சம்பவங்களால் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியற்ற ஒரு சூழலே இருந்தது. இதற்கிடையே மணிப்பூரில் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரிய உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிப்பது கடினம் என்றும் குறிப்பிட்ட பிரிவினரைத் தீவிரவாதிகள் போல உருவாக்கப்படுவது போல இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர். மணிப்பூர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை நடக்கும் நிலையில், நீதிபதி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இதுபோல கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
என்ன வழக்கு: அதாவது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மணிப்பூர் வன்முறை குறித்த பல வழக்கு நடந்து வருகிறது. அது இல்லாமல் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதாவது, மணிப்பூர் மாநிலத்தில் போதைப் பொருளைத் தயாரிக்கும் பணிகளும் அதற்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் பணிகளும் நடந்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறுவோரும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் குறிப்பிட்ட சமுதாயத்தைத் தான் மேற்கொண்டு வருகிறார்கள்.. எனவே, இந்த சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கருத்து: அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி: , ஏற்கனவே மணிப்பூர் வன்முறை தொடர்பாகப் பல வழக்குகளை விசாரித்து வருகிறோம். இந்த நேரத்தில் உங்கள் வழக்கை ஏற்பது கடினம். உங்கள் மனுவிலேயே குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தீவிரவாதிகள் போல உருவகப்படுத்தியுள்ளார்கள். அதை நிச்சயம் எங்களால் ஏற்கவே முடியாது..
இந்த மணிப்பூர் விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். அது இந்த நீதிமன்றத்திலும் நடப்பதை ஏற்க முடியாது" என்று தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க மறுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications