ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு ரூ.11.45 கோடியா? அய்யய்யோ இல்லங்க.. பதறிப்போய் விராட் கோலி ட்வீட்!
டெல்லி: இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு ரூ. 11.45 கோடி பெறுவதாக பரவிய தகவல் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. எனது சமூக ஊடக வருமானம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல என கோலி தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தாங்கள் பகிரும் சில பதிவுகளுக்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவது உண்டு. அதன் மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கும். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் குறித்த தகவலை ஹாப்பர் ஹெச்.க்யூ எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விளையாட்டுப் பிரபலங்களில் முதல் மூன்று இடங்களில் ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ரொனால்டோ ஒரு பதிவுக்கு ரூ.26.76 கோடி ஈட்டுகிறார். மெஸ்ஸி ரூ.21.49 கோடி ஈட்டுகிறார். கோலி ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி ஈட்டுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹாப்பர் ஹெச்.க்யூ நிறுவனம் வெளியிட்ட இந்தப் பட்டியலில் உலக அளவில் டாப் 20 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றார். இந்த பட்டியலில் மற்றொரு இந்தியரான பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 29-வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ 4.40 கோடி பெறுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அதிக நபர்கள் பின்தொடரும் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. இன்ஸ்டாகிராமில் கோலியை 256 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளதாக ஹாப்பர் க்யூ நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் செய்திகள் பரவின.
இந்த நிலையில் இன்று விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விராட் கோலி தனது ட்வீட்டில் "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றி உள்ளவனாக கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் நான் சமூக வலைதளத்தில் ஒரு பதிவுக்கு சம்பாதிக்கும் பணம் தொடர்பாக செய்திகள் உண்மையல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இனி விராட் கோலியே அவுட்டானாலும் கவலை இல்லை.. பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் ரஜத் பட்டிதார் இருக்காரு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications