Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வஃக்பு வழக்கு.. புதிய நியமனங்களுக்கு தடை தொடரும்..15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரமின்மை காரணமாக வக்ஃபு தொடர்புடைய வழக்குகளை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி ஆர் கவாய் உத்தரவிட்டுள்ளார். மேலும் வக்ஃபு அமைப்புகளில் நியமனங்கள் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த விசாரணை வரை தொடரும் என்றும் உத்தரவிட்டார்.

கடந்த விசாரணையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியது. வக்பு திருத்த சட்டப்படி எந்த ஒரு புதிய நியமனமும் செய்யக்கூடாது, நிலம் வகைப்படுத்துதல், ஏற்கனவே வக்பு இடம் என்று அறியப்பட்ட சொத்துக்களின் மீது எந்தவித நடவடிக்கையும் கூடாது என்று உத்தரவிட்டது.

Wakf

இந்த வழக்கு விசாரணை நடைபெறும் காலக்கட்டத்தில் மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்கள் ஆகியவற்றில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முக்கியமாக அடுத்த விசாரணை நடைபெறும் வரை அதிகாரப்பூர்வ பதிவு ஆவணங்கள் இல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வக்ஃப் சொத்துக்கள் முதல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் வரை அனைத்து வக்ஃப் சொத்துக்களும் ரத்து செய்யப்படவோ மாட்டாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

முக்கியமாக கடந்த விசாரணையில், முஸ்லிம்களின் வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக முடியும் என்றால், இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்கள் உறுப்பினராக முடியுமா? எதற்காக இப்படி ஒரு நடைமுறை என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரமின்மை காரணமாக வக்ஃபு தொடர்புடைய வழக்குகளை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி ஆர் கவாய் உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்த விசாரணை வரும் வரை வக்ஃபு அமைப்புகளில் நியமனங்கள் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் உத்தரவிட்டார்.

வழக்கு பின்னணி

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து சட்டமானது. வக்ஃப் சட்டத்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. திமுக சார்பில் ஆ.ராசா எம்.பி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

40 க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன், வக்ஃப் வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃப் சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இஸ்லாமிய பெண்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது உட்பட, பல மாற்றங்களை இந்த சட்டத்தில் செய்துள்ளனர்.

வாரியங்களின் 'தன்னிச்சையான' அதிகாரத்தை குறைக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது வக்ஃப் வாரியங்களின் அளப்பரிய பலத்தை குறைக்கும் வகையில் இந்த திருத்தங்களை மேற்கொண்டு உள்ளனர். முக்கியமாக தற்போதுள்ள வக்ஃப் சட்டத்தின் படி வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும். இந்த அதிகாரம் நீக்கப்பட்டு உள்ளது. வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியாது. அதாவது முன்பு வக்ஃப் வாரியம் ஒரு நிலத்தின் வில்லங்க விவகாரங்களை, அந்த நிலத்தின் வரலாற்றை ஆராயாமல் அப்படியே உரிமை கோர முடியும். ஒரு நிலத்தை அவர்கள் உரிமை கோரினால்.. அதற்கு டாக்குமெண்ட் இல்லாத பட்சத்தில் வக்ஃப் வாரியம் அதை எடுத்துக்கொள்ள முடியும். இனி அப்படி செய்ய முடியாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+