பாஜக கூட்டணியில் வெடித்த குழப்பம்? நேராக "அவரையே" சந்தித்த முக்கிய தலைகள்! எதிர்பார்க்காத ட்விஸ்ட்
டெல்லி: மத்திய அரசு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வக்பு வாரியத்தில் பல சட்டத் திருத்தங்களை முன்மொழிந்து இருந்தது. இதற்கிடையே இந்தச் சட்டம் இப்போது என்டிஏ கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ்குமாரின் கட்சித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசத் தொடங்கியுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகி இருக்கிறது.
இப்போது மத்தியில் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி அரசே ஆட்சியில் இருக்கிறது. இப்போது பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியு மிக முக்கிய கட்சியாக இருக்கிறது.

கூட்டணிக் கட்சிகள்: இதற்கிடையே மத்திய அரசு இப்போது முன்மொழிந்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு நிதிஷ்குமார் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ள, தெலுங்கு தேசம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இந்த விவகாரத்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில், இப்போது நிதிஷ்குமார் கட்சியும் அதில் இணைந்துள்ளது.
நிதிஷ் குமார் இப்போது பீகார் மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். பீகாரில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அங்கே சுமார் 18% இஸ்லாமியர்கள் இருக்கும் நிலையில், நிதிஷ் கட்சி இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த வக்பு வாரிய சட்டத்திற்கு ஜேடியு ஆதரவு தெரிவித்தது. இம்மாத தொடக்கத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கூட அக்கட்சியின் எம்பி ராஜீவ் ரஞ்சன் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவே பேசியிருந்தார். வக்பு வாரியத்தில் வெளிப்படைத்தன்மைக்கு இந்த சட்ட திருத்தங்கள் தேவை என்று அவர் கூறியிருந்தார்.
எதிர்ப்பு: ஆனால் இதற்கு ஜேடியு கட்சியிலேயே இப்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக அம்மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜமா கான் முதல்வர் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து இதில் இருக்கும் பிரச்சினைகளை விளக்கி இருந்தார். அதேபோல இந்தச் சட்டத்தால் முஸ்லீம்கள் அச்சத்தில் இருப்பதாகப் பீகார் நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரியும் கூறியிருந்தார்.
நிதிஷ்குமாருக்கு மிக நெருக்கமாக இருக்கும் தலைவர்களில் ஒருவராக இந்த விஜய் குமார் சவுத்ரி கருதப்படுகிறார். எனவே, அவரே இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தவிர ஜேடியு எம்எல்ஏ குலாம் கவுஸ் உள்ளிட்ட பலரும் இதில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜேடியு தலைவர்கள்: இப்படி கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் ஜா, பீகார் மாநில அமைச்சர் முகமது ஜமா கான் ஆகியோர் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூவை நேரில் சந்தித்தனர். இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
வக்பு வாரிய சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்தச் சட்டம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு விளக்கம் என்ன: இருப்பினும், பாஜகவினர் இந்தச் சட்டத் திருத்தங்கள் வக்பு வாரியத்தின் செயல்பாட்டை வெளிப்படைத்தன்மை நிறைந்ததாகவே மாற்றும் என்று கூறி வருகின்றனர். வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இருக்கலாம்.. குறிப்பாக முஸ்லீம் இல்லாதவர்களும் கூட கண்டிப்பாக இருக்க வேண்டும், நிலம் நன்கொடை தரக் கட்டுப்பாடுகள் என மொத்தம் 44 சட்டத் திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications