Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம்..தலையிடும் உலக நாடுகள்..ராணுவம் தீர்வாகாது - ஐ.நா.அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் இரு நாடுகளுக்கிடையே உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்றும், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

India pakistan United Nations War

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம், கப்பற்படை, விமானப் படையினர் தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. விமானப் படை விமானங்களும் அவசர கால பயிற்சியைத் தொடங்கியுள்ளன. பயங்கரவாத சம்பவம் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் சூழல் உள்ளதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு உலக நாடுகள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத் துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. உளவுத் துறை மற்றும் ராணுவத்தின் அறிவுரைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலையடுத்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கலக்கமடைந்த பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையில் கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று கூடிய நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு கிடைக்காது என்றும். இரண்டு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே நீண்டகாலமாகவே பிரச்சனைகள் உள்ளன. அதே சமயம் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு காரணத்துக்காகவும் மக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்தில் நடைபெற்ற இந்தப் பிரச்சனையால் இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு கிடைக்காது. எனவே, இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே உச்சபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்தப் பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். எந்த தவறையும் செய்யாதீர்கள். ராணுவத் தீர்வு என்பது இப்பிரச்சினைக்கு தீர்வாகாது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+