இந்தியா.. எதிர்க்கட்சி கூட்டணியை பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்ட மோடி! ராகுலுக்கு வந்த கோபம்! பதிலடி
டெல்லி: காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‛இந்தியா' எனும் கூட்டணியை பிரதமர் மோடி இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு தாக்கினார். இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‛இந்தியா' (I-N-D-I-A)எனும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance) என்பது தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் முழு அர்த்தமாகும்.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, மதிமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனையில் இந்த கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ‛இந்தியா' எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகீதின், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவை கூட தங்களின் பெயர்களில் இந்தியா என்பதை கொண்டுள்ளன என கூறியுள்ளார். இதில் இந்தியன் முஜாகீதின் என்பது பயங்கரவாத அமைப்பாகும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக மத்திய அரசு தடை செய்துள்ள நநிலையில் இந்திய கிழக்கிந்திய கம்பெனி சுதந்திரத்துக்கு முன்பாக இந்தியாவை சுரண்டியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்பது நாட்டுக்கு நல்லதாக இருக்காது எனும் வகையில் பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டுள்ள பிரதமர் மோடிக்கு அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:
‛‛எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்து கொள்ளுங்கள். நாங்கள் ‛இந்தியா' தான். மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம். அனைத்து மக்களிடமும் அன்பு மற்றும் அமைதியை கொண்டு வருவோம். மேலும் மணிப்பூரில் ‛இந்தியா'வின் கொள்கையை கட்டமைப்போம்'' என பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications