நாங்கள் செய்ததை எல்லாம் மறந்துவிட்டீர்களா? இதுதான் நட்பா?.. நேபாளத்தின் செயலால் கொதிப்பில் இந்தியா!
டெல்லி: நேபாளத்திற்கு இந்தியா செய்த உதவிகளை எல்லாம் அந்த நாடு மறந்துவிட்டு செயல்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக நேபாளம் வெளியிட்டு இருக்கும் புதிய மேப் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வருகிறது. அந்த மேப் தொடர்பான சட்ட திருத்தம் இன்று நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இரண்டு நாட்டு உறவில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

சண்டைக்கு காரணம்
அங்கு இந்தியா அமைத்த சாலைக்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதனால் லிபுலேக் பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி நேபாளம் மேப் ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகளை நேபாளம் உள்ளே கொண்டு வந்து வரைபடமாக அந்த நாடு வெளியிட்டது. இதை அந்நாட்டின் இரண்டு அவைகளிலும் பிரதமர் சர்மா தாக்கல் செய்துள்ளார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் நேபாளத்தின் இந்த செயல் தொடர்பாக இந்தியா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், எல்லை பிரச்சனையில் எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். நேபாளம் உடன் கலாச்சார ரீதியாக, வரலாற்று ரீதியாக நல்ல நட்பு இருக்கிறது.

உதவி செய்தோம்
கொரோனா பாதிப்பு நேபாளத்தில் ஏற்பட்ட போது அவர்களுக்கு நாங்கள் உதவி செய்தோம். 25 டன் மருத்துவ பொருட்களை நேபாளத்திற்கு நாங்கள் அனுப்பி வைத்தோம். அதேபோல் நேபாளத்திற்கு நாங்கள் ஹைட்ராக்சி குளோரோகுயினை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் நேபாளம் இப்போது எங்களுக்கு எதிராக, இந்தியாவிற்கு எதிராக மேப் விட இருக்கிறது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் உதவி
ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் கட்ட நாடுகளில் நேபாளம் இருந்தது. அவர்களுக்கு நாங்கள் மிக விரைவாக உதவிகளை செய்தோம். வெளிநாடுகளில் இருக்கும் நேபாளம் மக்களை விமானம் மூலம் மீட்டு கொண்டு வருவதற்கும் நாங்கள்தான் உதவி செய்தோம்,. மனிதாபிமான அடிப்படையில் நாங்கள்தான் அவர்களுக்கு உதவி செய்தோம்.
Recommended Video

தடை இல்லை
அதேபோல் கொரோனா காலத்திலும் நேபாளத்திற்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்தோம். நேபாளத்திற்கு லாக்டவுன் காலத்திலும் நாங்கள் ஏற்றுமதியை செய்து வந்தோம். தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வந்தோம். நேபாளத்திற்கு எதிராக நாங்கள் எப்போது எந்த விதமான செயலையும் செய்தது இல்லை, தடைகளையும் செய்தது இல்லை, என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications