"ரூ.98 லட்சம் இழப்பீடு கொடுத்தது உண்மைதான், ஆனால்.." உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்தினர் பரபர
டெல்லி: அக்னிபாத் விவகாரம் இப்போது மீண்டும் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இது தொடர்பாக உயிரிழந்த அக்னிபாத் வீரர் அஜய்குமாரின் குடும்பத்தினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், இழப்பீட்டுத் தொகை இன்னும் முழுமையாக தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அக்னிபாத் திட்டம் குறித்து இப்போது விவாதம் எழுந்துள்ளது. அக்னிபாத் வீரர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால் அந்த வீரருக்கு ரூ. 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இழப்பீட்டுத் தொகை: இதற்கிடையே உயிரிழந்த அக்னிபாத் வீரரின் குடும்பத்தினர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதாவது பணியின் போது மரணமடைந்த அக்னிவீர் அஜய் குமார் மரணத்திற்கு வீர மரணம் என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இழப்பீட்டுத் தொகை கிடைத்தது உண்மை தான் என்ற போதிலும் அந்த இழப்பீட்டுத் தொகை அஜய்குமாரை திரும்பக் கொண்டு வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அஜய் குமார் தந்தை பிரபல ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில், "அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.. எங்கள் குடும்பத்திற்கு ஓய்வூதியம் தேவை.. கேன்டீன் கார்டு கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இழப்பீட்டுத் தொகை: உயிரிழந்த அக்னிபாத் வீரர் அஜய் குமாரின் சகோதரியும் கிட்டதட்ட இதே கருத்துகளைத் தான் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில். "நான்கு வருட வேலைக்காக என் அண்ணன் உயிரை இழந்துள்ளார்.. அரசு ₹ 1 கோடி கொடுத்துள்ளது உண்மைதான். ஆனால், எனது சகோதரர் இல்லாமல் அந்தத் தொகையை மட்டும் வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும்.. எனவே, அக்னிவீர் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.
இந்த அக்னிபாத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.. இத்திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் மட்டுமே ஆயுதப் படைகளில் பணிபுரிவார்கள். 5 மாத கால பயிற்சிக்குப் பிறகு ஆயுதப் படைகளில் பணி அமர்த்தப்படுவார்கள். 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் அவர்களில் 25% மட்டும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற 75% பேர் விடுவிக்கப்படுவார்கள். மேலும், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இந்த வீரர்கள் பணியில் உயிரிழக்கும் போது அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வூதியம் வழக்கமான சலுகைகள் கிடைக்காது.
பரவிய தகவல்: இது தான் நாடு முழுக்க விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பணியில் இருக்கும் போது ராணுவ வீரர் உயிரிழந்தால் அவருக்கு வழக்கமாகக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இதற்கிடையே உயிரிழந்த அஜய் குமார் குடும்பத்தினருக்கு ராணுவத்திடம் இருந்து 48 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது.. ராணுவம் ₹ 98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய நிலையில், அதற்கு நேர்மாறாக இவர்கள் கூறிய தகவல் இருக்கிறது.
விளக்கம்: இதற்கிடையே ராணுவம் தரப்பில் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்று பரவிய தகவல்களை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்திற்கு மொத்தம் ₹ 98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தது.
இது குறித்து இந்திய ராணுவம் தனது அறிக்கையில், "அக்னிவீர் அஜய் குமார் செய்த உன்னத தியாகத்திற்கு இந்திய ராணுவம் வணக்கம் செலுத்துகிறது. மொத்த இழப்பீட்டுத் தொகையில், அக்னிவீர் அஜய் குடும்பத்திற்கு ஏற்கனவே ₹ 98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிரக் கருணைத் தொகை மற்றும் பிற சலுகைகள் சுமார் 67 லட்சம் வழங்கப்படும். இதன் படி மொத்த இழப்பீட்டுத் தொகை சுமார் ₹ 1.65 கோடியாக இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
குடும்பத்தினர்: இதையடுத்து அஜய் குமார் குடும்பத்தினரும் இது தொடர்பாகக் கூறுகையில், "முதலில் ராணுவத்திடம் இருந்து ரூ.48 லட்சம் தான் வந்தது. அதன் பிறகு ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து காப்பீட்டுத் தொகை என ரூ.50 லட்சம் வந்தது. அதேநேரம் இது தவிர ரூ.60 லட்சம் வழங்க உள்ளதாக ராணுவம் தெரிவித்தது. அந்தத் தொகை எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை" என்றனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications