எதிர்க்கட்சி வரிசையில் அமரும் இந்தியா கூட்டணி? ஆலோசனைக்கு பின் கார்கே பரபரப்பு பேச்சு
டெல்லி: டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக்கு பிறகு மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக அரசை அகற்ற முயற்சி எடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
நமது நாட்டில் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. இதில், பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

மொத்தம் 543 சீட்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 சீட்களிலும், ஜேடியு 12 சீட்களிலும், ஷிண்டே சிவசேனா 6 சீட்களிலும் வென்றன.
எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறிய நிலையில், தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே இருந்தது. 400+ இடங்கள் என்று சொல்லித் தேர்தலை எதிர்கொண்ட பாஜகவுக்கும் மிகப் பெரிய ஷாக் காத்திருந்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் கை ஓங்கியது.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டி ஆர் பாலு, சரத்பவார், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:- பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியா கூட்டணி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளுக்காக தொடர்ந்து போராடும்.
மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நேரம் வரும் போது பாஜக அரசை அகற்ற முயற்சி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் ராகுல் காந்தி கூறுகையில், "இந்தியா கூட்டணியின் குரல் மக்களின் குரல் என்பதை தேர்தல் முடிவு தெளிவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து பாஜகவின் மக்கள் விரோத போக்கை எதிர்ப்போம்" என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications