இதுதான் ஆனந்த் மகேந்திரா.. "பானை" நீர் or பிரிட்ஜ் தண்ணீர் எது பெஸ்ட்! நறுக்கென சொன்னார் பாருங்க
டெல்லி: நாட்டின் டாப் பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா, மண் பானை நீர் மற்றும் பிரிட்ஜ் நீரை ஒப்பிட்டுக் கருத்து தெரிவித்துள்ளார். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் இப்போது இருக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவர் ஆனந்த் மகேந்திரா.. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தொழிலதிபர்களில் ஒருவர் இவர்.

மகேந்திரா & மகேந்திரா, டெக் மகேந்திரா, மகேந்திரா ஹாலிடேஸ் எனப் பல நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார். மேலும், இவர் தனது மனத்திற்குப் பட்ட பல விஷயங்களை ட்விட்டரிலும் பகிர்ந்தே வருகிறார்.
கோடை வெப்பம்: இதனிடையே இப்போது கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் சூழலில், இது குறித்தும் அவர் தனது ட்விட்டரில் நறுக்கென ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். பொதுவாகக் கோடைக் காலத்தில் சாப்பாட்டைக் காட்டிலும் நமக்குத் தண்ணீர் தான் அதிகம் தேவைப்படும். அதிலும் அடிக்கும் வெயிலுக்குச் சில்லென பிரிட்ஜில் வைத்திருந்தே தண்ணீரைக் குடிக்க நாம் விரும்புவோம். இருப்பினும், இப்படி பிரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பது உடல்நிலைக்கு நல்லதில்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இது குறித்த ஆனந்த் மகேந்திரா ட்வீட் செய்துள்ளார். ஆனந்த் மகேந்திரா இந்தியாவின் பெருமைகள், சிறப்புகள் குறித்து அடிக்கடி ட்வீட் செய்வார். நமது நாட்டில் மண் பானையில் நீர் சேமிக்கும் பழக்கம் இன்னுமே கூட பரவலாக இருந்து கொண்டே தான் இருக்கிறது.
நீர்: இதனிடையே பானை நீர், பிரிட்ஜில் வைத்துக் குடிக்கும் நீர் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆனந்த் மகேந்திரா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.
ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டரில், "உண்மையில் பானை என்பது வடிவமைப்பு மற்றும் அழகியல் ரீதியாகவும் சிறப்பான ஒன்று.. இப்போது நாம் வேகமாக ஓடிக் கொண்டு இருக்கும் சூழலில் பானை நீர் என்பது பிரீமியம் வாழ்க்கை முறையாகவே மாறுகிறது" என்று பதிவிட்டு பானை நீர் நன்மைகள் என சில பாயிண்டுகள் இருக்கும் படங்களைப் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள படத்தில், பானை நீர், பிரிட்டஜை ஒப்பிட்டுள்ளனர். இரண்டுமே நீரை கூல் செய்யும் என்றாலும் பானை ஒன்றின் விலை 200 தான்.. அதேநேரம் பிரிட்ஜ் விலை 10 ஆயிரம். மேலும், பிரிட்ஜ் 7-15 ஆண்டுகள் மட்டுமே வரும். அதேநேரம் பானை காலம் முழுக்க வரும். பிரிட்ஜிற்கு மின்சாரம் தேவை.. மேலும் மெயின்டனஸ்சும் அதிகம். பானைக்கு மின்சாரம் தேவையில்லை. மெயின்டனஸ் குறைவு.
நெட்டிசன்கள்: மேலும், பானையை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் எனப் பதிவிட்டுள்ளார். மகேந்திராவின் ட்வீட்டை பலரும் ஏற்றுக் கொண்டே இருக்கின்றனர். இருப்பினும் சிலர் இது நடைமுறைக்கு ஒத்து வராது என்றும் கூறி வருகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சிலர், "மண் பானைகள் தண்ணீரைச் சேமிப்பதற்காக மட்டுமே பயன்படும். ஆனால், பிரிட்ஜ் மூலம் நமக்குப் பல பயன்கள் இருக்கிறது. அதேபோல காய்கறி, பழங்களையும் கூட நாம் பிரிட்ஜில் சேமிக்கலாம்.. ஆனால் பானையில் சேமிக்க முடியாது. எனவே, இந்த இரண்டையும் ஒப்பிடுவது சரியானது இல்லை சார்" என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.
பதில்: அதற்கும் பதிலளித்து மகேந்திரா, ''இது லைட்டான ஒரு ஒப்பீடு தான்.. எனவே இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வலிமைமிக்க பிரிட்ஜிற்கு இப்போது அழிவு இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நபர், ''கடந்த 16 ஆண்டுகளாக நான் இதைப் பயன்படுத்துகிறேன்.. இயற்கையாகக் குளிர்ந்த நீர். தண்ணீர் சுவை அதிகரிக்கிறது. இருமல் சளி உள்ளிட்ட ஒவ்வாமையைத் தடுக்கும். இதனால் நீண்ட காலத்திற்கு முன்பு ஐஸ் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications