ஜெட் வேகம்.. குஜராத் அருகே வணிக கப்பலை சட்டென தாக்கிய ட்ரோன்! பின்னணி என்ன? 5 பாயிண்ட்ஸ்
டெல்லி: சவூதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி கொண்டு கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குஜராத் அருகே நடந்த இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 5 முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ராட்சத சரக்கு கப்பல்களில் கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்படுகின்றனர். இந்நிலையில் தான் சவூதி அரேபியாவில் இரந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு MV Chem Pluto எனும் பெயர் கொண்ட வணிக கப்பல் இந்தியாவுக்கு புறப்பட்டது.

இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய லைபீரியாவின் தேசியக்கொடியுடன் இந்த கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தான் இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் வகையில் அரபிக்கடலில் இன்று பயணித்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் உடனடியாக விரைந்தது.
மேலும் கடலோர காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் விக்ரம் வணிக கப்பலை நோக்கி திருப்பி விடப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் தான் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட கப்பல் குறித்து 5 முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
முதல் தகவல்: வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்த இடம் என்பது குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நடந்துள்ளது. இந்த கப்பல் சிறிது நேரத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய இருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர்.
2வது தகவல்: ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான வணிக கப்பலில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வியட்நாம் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் இருந்துள்ளனர். அதன்படி கப்பலில் இருந்த இந்தியாவை சேர்ந்த 20 பேர் உள்பட அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
3வது தகவல்: ட்ரோன் தாக்குதலால் அந்த வணிக கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. தற்போது தீ அணைக்கப்பட்டாலும் கூட கப்பலில் மின்சாரம் உள்பட சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பலை தொடர்ந்து இயக்குவதில் பிரச்சனை உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
4வது தகவல்: விபத்து நடந்தவுடன் இந்திய கடலோர காவல்படையின் ஐசிஜிஎஸ் விக்ரம் கப்பல் வணிக கப்பலை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த கப்பலில் இருந்து தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவி வழங்கும்படி அப்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
5வது தகவல்: இந்த ட்ரோன் தாக்குதலுக்கு இன்னும் யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த கப்பல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற லிபேரியா கொடியுடன் வந்த நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுவாக எழுந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில் ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இரு நாடுகள் இடையே மோதல் போக்கு உள்ளது. செங்கடல் பகுதியில் தொடர்ந்து ஹவுதி புரட்சிபடை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்த தாக்குதலில் சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் தற்போது வரை வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தியது யார்? என்பது உறுதி செய்யப்படவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications