"அந்த 9 மாநிலங்கள்.." பருவநிலை மாற்றத்தால் பேராபத்து.. லிஸ்டிற்குள் வந்த தமிழ்நாடு! ஏன் ஆபத்து
பருவநிலை மாற்றத்தால் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் பகுதிகள் பட்டியலில் பல இந்திய பகுதிகள் உள்ளன.
டெல்லி: பருவநிலை மாற்றத்தால் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் பகுதிகள் பட்டியலை கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் வெளியிட்டுள்ளது. இதில் பல இந்திய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சி தருபவையாக உள்ளன.
பருவநிலை மாற்றம் இப்போது அனைத்து உலக நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் புவி வெப்ப மயமாதல், பருவம் தவறிய பெய்யும் மழை, கடுமையான வறட்சி எனப் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்தால் மட்டுமே பருவநிலை பாதிப்பு மாற்றங்களைத் தடுக்க முடியும். இதற்காக உலக நாடுகள் பங்கேற்கும் ஐநா சார்பில் பருவநிலை மாநாடும் கூட நடத்தப்பட்டு வருகிறது.

பருவநிலை மாற்றம்
உலகின் வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்துமே இந்த பருவநிலை மாற்றம் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.. அமெரிக்காவில் கடந்தாண்டு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான வெப்பமும் அதேநேரம் கடுமையான குளிறும் ஏற்பட்டது. அதேபோல ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட வெள்ளம் பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது. இப்படி வானிலை சுழன்றடிப்பது பலருக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சீனா, இந்தியா, அமெரிக்கா
இதற்கிடையே கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் என்ற அமைப்பு வரும் காலத்தில் உலகின் எந்த நாடுகள் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. அதில் 2050 ஆம் ஆண்டளவில் அதிக காலநிலை ஆபத்தை எதிர்நோக்கும் 80% பகுதிகள் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
இந்தியாவில் பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மற்றும் அசாம் ஆகியவை மிகவும் பாதிக்கப்படக் கூடிய மாநிலங்கள் பட்டியலில் உள்ளன. தென்மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளாவும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வானிலை பயங்கரமான மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், இது முக்கியமான எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

50 மாநிலங்கள்
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அதிக ஆபத்துள்ள 50 மாநிலங்களில் இந்தியாவில் ஒன்பது மாநிலங்கள் உள்ளன.. அமெரிக்காவில் 5 மாகாணங்கள் உள்ள நிலையில், அதிகபட்சமாகச் சீனாவில் 26 மாகாணங்கள் உள்ளன. நதியால் ஏற்படும் வெள்ளம், கடலோர வெள்ளம், தீவிர வெப்பம், காட்டுத் தீ, வறட்சி, தீவிர காற்று மற்றும் உறையும் பணி எனப் பல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. மனிதர்கள் செய்யும் செயல்களால் புவி வெப்ப மயமாதல் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் நமது பூமி தொழில் புரட்சிக்கு முன்புடன் ஒப்பிடும்போது 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்பமாகியிருக்கும்.

தமிழ்நாடு எந்த இடம்
அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் டாப் 200 பகுதிகளில் ஆசியாவில் இருந்து மட்டும் 114 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக மிகத் தீவிரமான பாதிப்பை எதிர்கொள்ளும் டாப் 50 பகுதிகளில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் பீகார் (22 வது இடம்), உத்தரப்பிரதேசம் (25வது இடம்), அசாம் (28வது இடம்), ராஜஸ்தான் (32வது இடம்), தமிழ்நாடு (36வது இடம்), மகாராஷ்டிரா ( 38வது இடம்), குஜராத் (48வது இடம்), பஞ்சாப் (50வது இடம்), கேரளா (52வது இடம்) உள்ளன.

அசாம் ரொம்பவே மோசம்
அசாமில் ஒவ்வொரு ஆண்டும் பேரழிவைத் தரும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2050ஆம் ஆண்டில் 330 சதவிகிதம் வரை வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கும். அடுத்து சீனாவில் அங்கு மிகப் பெரிய பொருளாதார மண்டலமாக உள்ள ஜியாங்சு மற்றும் ஷான்டாங் அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய பொருளாதார நகரங்கள் ஆபத்தான மண்டலங்களில் உள்ளன.

உலக நாடுகள்
அதேபோல பிரேசில், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் சில பகுதிகள் இதில் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடல் நீர் மட்டம் உயர்வது மற்றொரு முக்கிய பிரச்சினை. இதனால் கடற்கரை அருகே இருக்கும் நகரங்கள் மிக மோசமான பாதிக்கப்படும். ஏற்கனவே, இந்த பிரச்சினையால் தான் இந்தோனேசியா தனது தலைநகரையே மாற்றியது நினைவுகூரத்தக்கது. இந்த தகவல்கள் அடிப்படையில் பருவநிலை மாற்றத்தை தடுக்க நாம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.
-
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications