விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம்? பாஜகவின் பிளான் என்ன? சாதக பாதகங்கள் என்னென்ன?
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முறையை பாஜக அமல்படுத்த இருப்பதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இந்த மாதம் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்து வருகின்றன.
தற்போது வரை இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்றம் மற்றம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையை மாற்றி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே முறையாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாட்டில் கடந்த 1967ம் ஆண்டு வரை இந்த இரண்டு தேர்தல்களும் ஒரே காலகட்டத்தில்தான் நட்டத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் நடந்த ஆட்சி கலைப்பு காரணமாக தேர்தல்கள் நடத்தப்படும் காலங்கள் மாற்றப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. தற்போது இந்த மாதம் 18 முதல் 22ம்தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூட்டப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து மசோதா முன்வைக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி இந்த மசோதா முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? என்பது குறித்து அரசியல் ஆய்வளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
முதல் இந்த திட்டத்தின் நேர்மறையான அம்சங்களை பார்க்கலாம். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகியவை சுமார் ரூ.60,000 கோடியை செலவு செய்திருக்கின்றன. இதேபோல சட்டமன்ற தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அளவில் செலவு செய்கிறது. எனவே இந்த இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தினால் இந்த செலவுகளை குறைக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
அதேபோல நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக அடிக்கடி நிர்வாக அமைப்பின் பணிகள் தடைபடுகின்றன. இந்த இரண்டு தேர்தல்களை சேர்த்து நடத்துவதன் மூலம் நிர்வாக திறனை மேலும் அதிகரிக்க முடியும். மேலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் சட்டமன்ற தேர்தலின் போது அந்த மாநிலத்தில் அமல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. இதுவே தேர்தலை ஒன்றாக நடத்தினால் இதுபோன்ற இடையூறுகள் ஒருமுறை மட்டுமே ஏற்படும்.
இவை அனைத்திற்கும் மேல், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையானது வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்து. ஆனால் இதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக இப்படி தேர்தல் நடத்துவதாக இருந்தால் மாநில சட்டப்பேரவையின் விதிமுறைகளை மக்களவையுடன் ஒத்திசைக்க அரசியலமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பிற நாடாளுமன்ற நடைமுறைகளும் திருத்தப்பட வேண்டும். அதேபோல இந்தியா பல மாநிலங்களால் ஆன நாடு. எனவே மாநில பிரச்னைகளுக்கான முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை உடையது.
சில மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்கள், பல மாநிலங்கள் புறக்கணித்துவிடும். எனவே மாநிலத்தின் தனித்தன்மையை தொடர்ந்து பாதுகாக்க அவர்களின் உரிமைக்கான போராட்டத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டி இருக்கிறது. இப்படி இருக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும். மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுக்கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அதேபோல தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள பண பலத்தை வைத்திருக்கின்றன. ஆனால் மாநில கட்சிகளின் நிலைமை அப்படி இருக்கவில்லை. எனவே தேர்தலை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படலாம். அதுமட்டும் இல்லாமல் ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் சட்டமன்றத்தில் வெற்றிபெரும் அதே கட்சியை 77 சதவிகித மக்கள் நாடாளுமன்றத்திற்கும் தேர்தெடுப்பார்கள். ஆனால் இதே 6 மாத இடைவெளியில் தேர்தல் நடத்தப்பட்டால் 61 சதவிகத மக்கள்தான் ஒரே கட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்று 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட IDFC நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வரவேற்கின்றன. ஆனால் இடதுசாரிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கட்சிகள் இதனை கடுமையாக எதிர்க்கின்றன.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications