Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய மாணவர்கள் குறி.. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் திட்டம்.. எச்சரிக்கும் இந்திய தூதர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்படிப்பிற்காகக் கனடாவுக்கு செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே அந்த மாணவர்களைக் குறிவைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தவறாக வழிநடத்துவதாக அங்கிருந்து திரும்பிய இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மா எச்சரித்துள்ளார். மேலும், காலிஸ்தான் பயங்கரவாதிகள் பாலோ செய்யும் திட்டத்தையும் விளக்கியுள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், இது கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மோசமடைந்தே வருகிறது.

canada justin trudeau

எச்சரிக்கை: இதற்கிடையே கனடாவுக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் குறிவைப்பதாகவும் அவர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அங்கிருந்து இந்தியா திரும்பிய தூதர் சஞ்சய் குமார் வர்மா தெரிவித்தார். இந்த சஞ்சய் குமார் வர்மா கனடாவில் இந்தியாவின் தூதராக இருந்தார். இந்தியா கனடா இடையே மீண்டும் பிரச்சினை வெடித்த நிலையில், சஞ்சய் குமார் வர்மாவை இந்தியா திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கனடாவில் உள்ள பிள்ளைகள் படித்தால்.. அவர்களுடன் அவ்வப்போது பேசுங்கள்.. அவர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ள முயலுங்கள். தவறான பாதையில் செல்லாமல் இருக்க அவர்களை வழிநடத்துங்கள். ஏனென்றால் கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அங்குள்ள இந்திய சமூகத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு.. எனவே கவனமாக இருக்க வேண்டும்.

எப்படி: கனடாவில் உள்ள இந்திய மாணவர்களைத் தான் பெரும்பாலும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறிவைக்கிறார்கள். அங்குப் பொருளாதாரம் காரணமாக எல்லா மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை. எனவே, கல்லூரியில் படிக்கும் மாணவர்களைக் குறிவைத்து அவர்களுக்கு முதலில் பணமும் உணவும் வழங்குகிறார்கள். இப்படியே மெல்ல அவர்களின் மனதை மாற்றுகிறார்கள். தீய எண்ணங்களை அவர்களுக்குள் விதைக்கிறார்கள்.

கனடாவில் உள்ள இந்தியத் தூதரக கட்டிடங்களுக்கு வெளியே இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவது அல்லது நமது தேசிய கொடியை அவமதிப்பது போன்ற போராட்டங்களை வீடியோ மற்றும் போட்டோ எடுக்குமாறும் சில மாணவர்களை அந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வற்புறுத்துகின்றனர். இதை வைத்துத் தான் கார்னர் செய்கிறார்கள்.

மாணவர்கள் செய்யும் தவறு: அதன் பிறகு, நாடு திரும்பினால் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களைப் போட்டோ வீடியோ எடுத்ததற்காகவே தண்டிக்கப்படுவாய் எனச் சொல்லி மிரட்டுகிறார்கள். இப்படி தான் அவர்கள் மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் இந்த செயல் அங்குள்ள இந்திய மாணவர்களைக் கடுமையாக பாதிக்கிறது. அவர்களைத் தவறான திசையிலும் தள்ளுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தவறான திசையில் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இந்தியா கனடா உறவு: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்தாண்டு முதலே மோதல் போக்கே நிலவி வந்தது. கனடாவில் கடந்தாண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார். அவர் கனடாவில் வைத்து கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்தில் இந்திய ஏஜெண்டுகள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணமாகும்.

இந்தியக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து எதாவது ஆதாரம் அளித்தால் விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியது. இருப்பினும், ஆதாரம் வழங்காமல் குற்றஞ்சாட்டுவதை மட்டுமே கனடா மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. இதன் காரணமாகவே இரு தரப்பிற்கும் இடையேயான உறவு மோசாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+