"போக்சோ.." சிறார்கள் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது! டெல்லி ஐகோர்ட் பரபர
டெல்லி: போக்சோ வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. மேலும், போக்சோ சட்டம் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்குக் கீழான சிறார்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தைகளைப் பாதுகாக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே போக்சோ வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், போக்சோ குறித்தும் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தது.

டெல்லி சிறுமி
டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்குக் கடந்த 2021, ஜூன் 30இல் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், அவருடன் வாழ அந்த சிறுமிக்குச் சுத்தமாகவே பிடிக்கவில்லை. இதையடுத்து கடந்த 2021 அக். 27இல் அவர் தனது ஆண் நண்பர் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் பஞ்சாபிற்குச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதில் அந்த இளைஞர் தனது மகளை விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாகக் கூறி இருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங் அந்த சிறுமியுடன் தனது அறையில் அரசு கூடுதல் அரசு வழக்கறிஞர் முன்னிலையில் பேசினார்.

சொந்த விருப்பம்
அப்போது அந்த சிறுமி தனக்குத் திருமணமாகும் போது, அக்டோபர் 28இல் தனக்கு 17 வயது ஆகி இருந்தது என்றும் தனது பிறந்த நாள் அக்டோபர் 1, 2004 என்றும் கூறி இருந்தார். அதேநேரம் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், திருமணம் செய்து கொள்ளும்படி தனக்கு யாரும் மிரட்டலோ அழுத்தமோ தரவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

முக்கிய கருத்துகள்
தன்னையும் தனது கணவரையும் கொலை செய்துவிடுவேன் என்று பெற்றோர் மிரட்டியதாகவும் இது தொடர்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கும் தான் சொந்த விபத்தின் பெயரில் தான் திருமணம் செய்து கொண்டேன் எனக் கூறியதும் நீதிமன்றமே தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டதையும் அந்த சிறுமி நீதிபதியிடம் கூறியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தார்.

முழு சம்மதம்
இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், "அந்த சிறுமியைக் குற்றஞ்சாட்டப்பட்டவர் வற்புறுத்தி இந்த உறவுக்குள் கூட்டி வரவில்லை. சொல்லப் போனால், அந்த சிறுமியே தான் அந்த நபரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அந்த சிறுமியின் வாக்குமூலத்தின் படி இருவருக்கும் இடையே இருந்த காதலும் உடலுறவும் இருவரின் முழு சம்மதத்துடன் தான் நடந்து உள்ளது. இதை அந்த சிறுமி அளித்த வாக்குமூலம் தெளிவாக உணர்த்துகிறது.

ஜாமீன்
இந்திய சட்டப்படி அந்த சிறுமி மைனர். எனவே, அவர் உடலுறவுக்குச் சம்மதம் தெரிவிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படாது என்ற போதிலும், அந்த சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அது சம்மதத்துடன் நடந்து உறவு என்பது தெளிவாகவே தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்க நான் உத்தரவிடுகிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார். மேலும், போக்சோ குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டு உள்ளார்.

போக்சோ
போக்சோவின் தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஜனவரி 2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் மேற்கோள்காட்டினார். அதாவது குழந்தைகளை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும் நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டம் இப்போது சமூகத்தின் சில பிரிவினரைத் துஷ்பிரயோகம் செய்யும் கருவியாக மாறுவதாக வேதனை தெரிவித்தனர். இதையும் டெல்லி நீதிபதி தனது தீர்பில் சுட்டிக்காட்டினர். அந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications