சட்டமன்ற மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது எப்படி? ஆர்டிகிள் 142வது பிரிவு என்ன சொல்கிறது
சென்னை: தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது என்றும், இதற்கு பிரம்மாஸ்திரம் போன்ற ஆர்டிகிள் 142வது பிரிவு என்ன சொல்கிறது என்பது பற்றியும் இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் நிறைவேறிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அவரது செயல் சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. அரசியல் அமைப்பின் 142 வது பிரிவை பயன்படுத்தி இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அரசியல் அமைப்பின் 142 வது பிரிவு என்றால் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

முக்கியமான நிகழ்வுகள்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில், குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவின்படி தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் இந்த ஒப்புதலை அளித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு சட்டம் 142-வது பிரிவு என்ன சொல்கிறது. இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட சில முக்கியமான நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.
* ஆர்டிகிள் 142 ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் தன்னிடம் நிலுவையில் உள்ள வழக்குகள் அல்லது விஷயங்களில் முழுமையான நீதியை வழங்க தேவையான எந்தவொரு தீர்ப்பையும் வழங்கலாம் அல்லது எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கலாம். இவ்வாறு வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்போ, பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவோ இந்தியா முழுவதும் செல்லுபடியாகும்.
பிரம்மாஸ்திரம் போன்று
* உச்ச நீதிமன்றத்தின் இந்த சிறப்பு அதிகாரமானது, நாடாளுமன்றம் இயற்றிய அல்லது அதன் அடிப்படையில் இயற்றப்படும் எந்தவொரு சட்டத்தின்படி அல்லது அதுவரை எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படாத நிலையில், குடியரசு தலைவர் உத்தரவு வழியாக நிர்ணயிக்கப்படும் முறையின்படி அமல்படுத்தப்பட வேண்டும்.
* நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவும், அவமதித்தால் தண்டிக்கவும் உச்ச நீதிமன்றத்திற்கு அரசியல் அமைப்பின் 142-வது விதி அதிகாரம் வழங்குகிறது. பல முக்கிய வழக்குகளில் பிரம்மாஸ்திரமாக உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது.
* போபால் விஷவாயு கசிவு வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க அதிரடியாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் இந்த விதியை பயன்படுத்தியது.
பேரறிவாளனை விடுதலை செய்தது
* 2014 ஆம் ஆண்டு நிலக்கரி ஊழல் சுரங்க ஒதுக்கீடுகளை இந்த விதியை பயன்படுத்தியே ரத்து செய்தது. 1993 முதல் 2010 வரை மத்திய அரசு செய்த 216 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்தது. அப்போதும் இந்த விதியை பயன்படுத்தியது.
* 2016 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைகளை ஒட்டிய மதுக்கடைகளை மூட 142 வது விதியை பயன்படுத்தியே நீதிமன்றம் உத்தரவிட்டது.
* 2019 -ல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய போதும் உச்ச நீதிமன்றம் இந்த விதியை பயன்படுத்தியது.
* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்யவும் இந்த விதியை பயன்படுத்தியது.
கடந்த ஆண்டு மட்டும் 3 முறை
* உச்ச நீதிமன்ற 142 வது விதியை அரிதாகவே பயன்படுத்தினாலும் கடந்த ஆண்டு மட்டும் 3 முறை பயன்படுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐஐடி தன்பாத்தில் கடைசி தேதி முடிந்த பிறகும் கட்டணம் செலுத்திய மாணவரை கல்வி நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள பிறப்பித்த உத்தரவுக்கு இந்த விதியை பயன்படுத்தியது.
* அதேபோல, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்து திருமண சட்டத்தின்படி, மீளமுடியாத திருமண பந்தத்தில் ஒரு தரப்பு விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட விவாகரத்து வழங்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 142 ஐயே உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது.
* அதேபோல, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி நிகழ்ந்ததையடுத்து, தேர்தல் முடிவுகளை மாற்றி, ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்த போதும், இந்த விதியையே உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications