உடனே உங்க பிள்ளைகளை கவனிங்க! "குரோமிங்" பகீர் கிளப்பும் புது டிரெண்ட்! 11 வயது சிறுவன் பரிதாபமாக பலி
டெல்லி: சமூக வலைத்தளத்தில் பரவும் ஒரு ஆபத்தான டிரெண்ட் காரணமாக இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அது என்ன டிரெண்ட்.. இதனால் சிறுவர்களுக்கு என்ன ஆபத்து என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எப்போது எது டிரெண்ட் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. திடீர் திடீரென ஒவ்வொரு விஷயங்கள் டிரெண்டாகும். இதுபோல திடீரென டிரெண்டாகும் மேட்டர்களால் பல நன்மைகள் நடந்துள்ளன.

அதேநேரம் இதுபோல டிரெண்டாகும் அனைத்துமே நல்ல விஷயம் எனச் சொல்ல முடியாது. பல சமயம் மோசமான விஷயங்களும் கூட டிரெண்டாகும். அவை பல நேரங்களில் உயிரையே கூட பறிப்பதாக அமையும்
உயிரிழப்பு: அப்படி தான் ஒரு விஷயம் இப்போது 11 வயது சிறுவனின் உயிரையே பறித்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் தான் இந்த ஆபத்தான டிரெண்டிங்கிற்கு பலியாகி இருக்கிறார். இது குறித்து சிறுவனின் பாட்டி கூறுகையில், "நண்பரின் வீட்டில் இரவு தங்குவதாகச் சொல்லிவிட்டு சென்றான்.
ஆனால், அவன் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டார். 'குரோமிங்' என்ற டிக்டாக் டிரெண்ட் காரணமாகப் பலியாகியுள்ளார். இரவு தூங்கிய உடன் அவருக்கு மாரடைப்பு ஏற்படவே உடனடியாக அவர் இறந்துவிட்டார். அவரை மீட்க மருத்துவமனை நிர்வாகம் எடுத்த முயற்சிகள் கை கொடுக்கவில்லை" என்றார்.
குரோமிங்: சரி இப்போது டிரெண்டாகும் அந்த 'குரோமிங்' என்றால் என்ன.. இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். குரோமிங் என்பது அபாயகரமான ஒரு பொழுதுபோக்கு செயல்பாடாகும். நெயில் பாலிஷ் ரிமூவர், ஹேர்ஸ்ப்ரே, டியோடரன்ட், பெட்ரோல், பெயிண்ட் தின்னர்கள், ஸ்ப்ரே பெயிண்ட் என வீட்டில் இருக்கும் அனைத்து ஆபத்தான கெமிக்கல்களும் அதில் பயன்படுத்தப்படும். இவற்றைப் போதைக்காகப் பயன்படுத்துவதே குரோமிங் டிரெண்ட் ஆகும்.
இது குறுகிய காலத்திற்கு ஒரு பரவச நிலையைத் தரும். ஆனால் இது நமது உடலில் ஆபத்தான விளைவுகளையும் கூட ஏற்படுத்துமாம். தலைச்சுற்றல், வாந்தி, இதய செயலிழப்பு மற்றும் மூளை பாதிப்பு போன்ற உள்ளிட்ட மோசமான விளைவுகளையும் இது ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இவற்றை உள்ளே இழுக்கும் போது இதில் உள்ள ரசாயனங்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் மிகஸ் ஆகும். இது பல்வேறு உடல் உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும்.
ஆபத்துகள்: சில நேரங்களில் இதனால் டிமென்ஷியா உள்ளிட்ட மிக கடுமையான பாதிப்புகள் கூட ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் மனச்சோர்வு, பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தும். அந்த கெமிக்கல்கள் நேரடியாக இந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் இந்த பாதிப்பை அது அதிகம் தூண்டும். குறிப்பாக மன அழுத்தம் இதனால் அதிகமாகவே ஏற்படுமாம்.
நீண்டகாலம் இதை எடுத்துக் கொண்டால் நினைவாற்றல் இழப்பு, ஐக்யூ அறிவுத்திறன் பாதிப்பு, கவன சிதறல் ஆகியவை கூட ஏற்படும். அளவு சற்றே கூடினாலும் கூட இதனால் உயிரிழப்பே ஏற்படுமாம். பிரிட்டனைச் சேர்ந்த இந்த சிறுவன் அப்படி தான் உயிரிழந்துள்ளார்.
பெற்றோரே கவனம்: பிரிட்டனில் தானே என்று நீங்கள் நினைக்கலாம். பிரிட்டனில் ஆரம்பிக்கும் ஆபத்தான டிரெண்ட் இந்தியாவுக்கு வந்து சேர ரொம்ப நேரம் ஆகாது. எனவே, பெற்றோர் உங்கள் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications