Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டென்னிஸுக்கு ரூ.2.5 கோடி செலவு! ஆனா ரீல்ஸ் போடுவேன்னு சொன்னா எப்படி? மகளை கொன்ற தந்தை! காரணம் பகீர்

Subscribe to Oneindia Tamil

குர்கான்: முன்னாள் ஜூனியர் சர்வதேச டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவ் என்பவரை அவரது தந்தையே வீட்டில் வைத்துச் சுட்டுக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்தக் கொலை குறித்தும் எதற்காகத் தந்தை தீபக் யாதவ் பெற்ற மகளையே சுட்டுக் கொன்றார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குர்கான் பகுதியில் வசித்து வருபவர் 25 வயதான ராதிகா யாதவ். இவர் ஜூனியர் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர்களில் விளையாடியவர். நேற்று காலை ராதிகாவை அவரது வீட்டில் வைத்து அவரது தந்தையே சுட்டுக் கொன்றார். செக்டார் 57 பகுதியில் அவர்கள் வீடு உள்ளது. அங்கு ராதிகா வீட்டின் முதல் மாடியில் உள்ள சமையலறையில் இருந்தபோது, தீபக் யாதவ் உள்ளே நுழைந்துள்ளார்.

What is reason for Gurugram Shocker Father Kills Tennis Player Radhika Yadav

மகளைக் கொன்ற தந்தை

பிறகு திடீரென ராதிகாவை அவர் மூன்று முறை சுட்டுள்ளார். அதில் ஒரு குண்டு அவரது கழுத்தில் பாய்ந்தது, இரண்டு குண்டுகள் அவரது முதுகில் பாய்ந்தன. இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் நடந்தது. துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு, தரை தளத்தில் வசித்து வரும் தீபக்கின் இளைய சகோதரர் குல்தீப் மாடிக்கு விரைந்து சென்றார்.

அங்கு ரத்தம் சூழ ராதிகா தரையில் சாய்ந்து கிடப்பதைக் கண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினருடன் இணைந்து ராதிகாவை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராதிகா உயிரிழந்தார். குல்தீப் அளித்த போலீஸ் பேரில் தீபக் (49) கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. தீபக் தன்வசம் இருந்த உரிமை பெற்ற துப்பாக்கி மூலம் மகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். அந்தத் துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்தபோது ராதிகாவின் தாய் வீட்டில் இல்லை.

விசாரணை

முதற்கட்ட விசாரணையில், ராதிகா அங்கு ஒரு டென்னிஸ் அகாடமி நடத்தி வந்ததும் அது தொடர்பாகத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் குமார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ராதிகா டென்னிஸ் பயிற்சி அளிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை.

அதை நிறுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார், ஆனால் அவள் கேட்கவில்லை. இதுவே துப்பாக்கி சூட்டிற்குக் காரணம் எனத் தெரிகிறது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது" என்றார்.

ரீல்ஸ் போடுவது பிடிக்கவில்லை

அதேபோல ராதிதா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடுவதும் தீபக்கிற்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதாவது ராதிகாவின் டென்னிஸ் பயிற்சிக்கு ரூ.2.5 கோடியை தீபக் செலவிட்டுள்ளார். இருப்பினும், திடீரென ஏற்பட்ட ஒரு காயத்தால் ராதிகாவால் தொடர்ந்து டென்னிஸ் ஆட முடியவில்லை. இந்தச் சூழலில் தான் அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட ஆரம்பித்துள்ளார். குடும்பத்திற்குக் கெட்ட பெயரை வாங்கி தரும் வகையில் எதுவும் செய்ய மாட்டேன் என ராதிகா கூறியிருக்கிறார். ஆனால், இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவது தீபக்கிற்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தந்தை கோபம்

மேலும், மகளின் சம்பாத்தியத்தில் தீபக் வாழ்வதாகவும் அக்கம்பக்கத்தினர் சிலர் பேசியுள்ளனர். இதுவும் தீபக்கை கோபப்படுத்தியதாக போலீசார் கூறுகிறார்கள். இருப்பினும், குடும்பம் நிதி நெருக்கடியில் இருந்ததாகத் தெரியவில்லை. தீபக் முன்பு ஒல்ட் குர்கானில் கார் உதிரிப் பாகங்கள் கடையை நடத்தி வந்தார். அவர் மூடிவிட்ட போதிலும் வாடகை வருமானமாகவே கணிசமான தொகை வருகிறதாம். இதனால் தீபக்கிற்கு பொருளாதாரச் சிக்கல் இருப்பது போலத் தெரியவில்லை. அவரது தம்பி குல்தீப் ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கூறுகையில், "மகளுக்குத் தந்தை தீபக் உறுதுணையாகவே இருந்தார். தினமும் பயிற்சிக்கும் உடன் செல்வார். போட்டிகளுக்குக் கூட ராதிகாவை அவரது தந்தை தீபக் தான் உடன் அழைத்துச் செல்வார். அந்தளவுக்கு முழு சப்போர்ட் கொடுத்து வந்தார். ஆனால், அவரே தனது மகளைக் கொன்றுவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+