உறுதியாக நின்ற இந்தியா! கத்தாரில் மாறிய சீன்!8 இந்தியர்கள் மீட்கப்பட்டது எப்படி! இதுவரை நடந்தது என்ன
டெல்லி: கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது அந்நாட்டிற்கு எதிராக உளவு பார்த்தாக கூறி இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியக் கடற்படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் ஆவர்.

கத்தார் கடற்படை வசம் இருக்கும் இத்தாலி நாட்டை சேர்ந்த U212 ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களை நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக உளவு பார்த்தாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்
என்ன நடந்தது: இதையடுத்து அவர்களில் 7 பேர் இன்று இந்தியா திரும்பியுள்ளனர்.. இதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார் என்றும் அவர் தலையிடவில்லை என்றால் விடுதலை ஆகி இருக்கவே மாட்டோம் என்றும் இந்தியா திரும்பிய அவர்கள் தெரிவித்தனர். இந்தியாவின் முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வில் இதுவரை நடந்தது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 30, 2020: கத்தார் நாட்டில் இருந்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இந்தியக் கடற்படையின் முன்னாள் வீரர்கள் எனச் சொல்லப்பட்டது. எதற்காக அவர் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கத்தாரின் புலனாய்வு அமைப்பு அவர்களைக் கைது செய்ததாகத் தகவல்கள் பரவ தொடங்கின.
அக்டோபர் 1, 2020: தோஹாவில் உள்ள இந்தியத் தூதர் மற்றும் துணைத் தூதரகத் தலைவர் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களை நேரில் சந்தித்தார். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
அக்டோபர் 3, 2020: கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாகத் தூதரக அணுகல் வழங்கப்பட்டது. சிறையில் இருந்த ஊழியர்கள் தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்த நிறுவனத்தின் சிஇஓ அவர்களுக்கு உதவ முயன்ற நிலையில், அவரும் கைது செய்யப்பட்டார். அவர் இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
மார்ச் 1, 2023: கடந்தாண்டு தான் இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நடந்தன. கைது செய்யப்பட்ட இந்தியர்கள் பல்வேறு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், அவை அனைத்தும் மார்ச் 1ஆம் தேதி நிராகரிக்கப்பட்டன.
மார்ச் 25 மற்றும் மார்ச் 29: அவர்கள் எட்டு பேர் மீதும் மார்ச் 25ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் மீது என்ன மாதிரியான வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு பொதுவெளியில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 29ஆம் தேதி இந்த விவகாரத்தில் கத்தார் அரசு தனது விசாரணையைத் தொடங்கியது.
மே 30, 2023: கைது செய்யப்பட்ட அனைத்து இந்தியர்களும் அங்குள்ள பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான தஹ்ரா குளோபல் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த வழக்கைத் தொடர்ந்து மே 30ஆம் தேதி இந்த நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் இந்தியர்களே பணியாற்றிய நிலையில், அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பினர்.
ஆகஸ்ட் 4, 2023: சுமார் 11 மாதங்கள் அவர்கள் அனைவரும் தனிமை சிறையில் இருந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவர்கள் வழக்கமான சிறை வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர். ஒரு அறையில் இரண்டு ஊழியர்கள் என்ற விகிதத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
அக்டோபர் 26, 2023: உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்து.
நவம்பர் 9, 2023: எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கத்தாரிடம் மேல்முறையீடு செய்துள்ளதாக இந்தியா கூறியது..
நவம்பர் 23, 2023: மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
டிசம்பர் 28: எட்டு முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்தது.
பிப். 12, 2023: தண்டனை குறைப்பு குறித்த அறிவிப்பு வந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த 8 பேர் இந்தியாவுக்கு வந்துவிட்டாலும் கூட பல்வேறு காரணங்களுக்காக இன்னும் 750 இந்தியர்கள் சிறையில் தான் உள்ளனர். அவர்களைத் தாயகம் அழைத்து வரவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications