எவ்வளவு தூங்கினாலும் சோம்பேறித்தனமா இருக்கா.. உடம்புல பல பிரச்சனை இருக்குனு அர்த்தம்! அலர்ட் மக்களே
டெல்லி: எவ்வளவு நேரம் தூங்கினாலும் சரி.. எழுந்த பிறகு சோம்பேறித்தனமாகவே உங்களுக்கு இருக்கிறதா.. அதற்கு என்ன காரணம்.. ஏன் இப்படி நடக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கும்.
இந்த நவீனக் காலத்தில் நாம் ஒரே இடத்தில் வேலை பார்க்க வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கிறது. இதுபோல நீண்ட காலம் எந்தவொரு உடல் ரீதியான வேலையும் செய்யாமல் இருப்பது நமக்குப் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக இதனால் ஏற்படும் பாதிப்புகளை நமக்கு முதலில் தூக்க நிலைகளில் ஏற்படும் மாற்றம் தான் உணர்த்தும். அப்போது தான் நம்மில் சிலருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும் கூட உடம்பு டயர்ட்டாக இருப்பது போலவே ஒரு உணர்வு தோன்றும்.
தூக்கம்: நியாயமாகப் பார்க்கும் போது 8 மணி நேரத் தூக்கத்திற்குப் பிறகு நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் தூங்கி எழுந்த பிறகும் சிலருக்கு உடல் சோர்வு அதிகம் இருக்கும். தூக்கம் போதாமல் இருப்பதே இதற்குக் காரணம் என நாம் நினைப்போம். உண்மையில் தூக்கமின்மை மட்டும் இதற்குக் காரணம் இல்லை. பின்னல் பல பிரச்சினைகள் உள்ளன. அதை நாம் உடனடியாக சரி செய்யவில்லை என்றால் மோசமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
எந்தவொரு உடல் உழைப்பும் இல்லாமல் இருப்போருக்கு இதுபோன்ற பிரச்சினை இருக்கும். இவர்களை ஆங்கிலத்தில் couch potato என்று அழைப்பார்கள். அதாவது எந்தவொரு உடல் ரீதியான நடவடிக்கையும் இல்லாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் இருக்கும் நபர்களுக்கு எவ்வளவு நேரம் படுத்து இருந்தாலும் சோர்வாகத் தான் இருக்கும். உடல் டயர்ட்டாக ஆகவில்லை என்றால் போதிய தூக்கம் கிடைக்காது. இது ஒரு காரணம்.
உடற்பயிற்சி: இந்த பிரச்சினை இருப்போர் தினசரி கொஞ்ச நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்தால் போதும்.. உங்கள் உடலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தரும். இரவு நன்றாகத் தூக்கம் வரும்.
பதற்றம்: இந்த லிஸ்டில் இருக்கும் அடுத்த காரணம் பதற்றம்.. பதற்றம் இருந்தால் அது உடல் சோர்வை அதிகரிக்கும்... நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது, உங்கள் உடல் அட்ரினலின் அதிகமாக வெளிவரும். எனவே, பதற்றப்படும் போது மூளையை ஓவர்ஆக்டிவேட் செய்யும். இது மிக விரைவாக நமது உடலைச் சோர்வடையச் செய்யும். பதற்றம் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும் போது நீங்கள் நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். புதிய நபர்களைச் சந்தியுங்கள்.. அதுபோல செய்வது நல்ல பலனைத் தரும்.
சத்துக் குறைபாடு: உடலில் புரதச் சத்து குறைவாக இருந்தாலும் இதுபோல நடக்கும். போதுமான வைட்டமின்கள், குறிப்பாக பி 12, ரத்த சிவப்பணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால் அது நமது செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும். இதுபோன்ற சூழல்களில் இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம். நீங்கள் சைவம் என்றால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சரிவிகித உணவு: மேலும், உங்கள் உடலுக்குச் சரிவிகித உணவு ரொம்பவே முக்கியம். செரிமானத்தின் போது, உணவு குளுக்கோஸாக மாற்றப்படுகிறது, இது மூளை உட்பட தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு ஊட்டமளிக்க ரத்த ஓட்டத்தின் வழியாகச் செல்கிறது. எனவே, சரிவிகித உணவைச் சாப்பிடாமல் துரித உணவுகளை மட்டும் அதிகம் சாப்பிட்டால் அதுவும் நமது உடலை மோசமாகப் பாதிக்கும்.
நீங்கள் இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் சென்று காலை 7 மணிக்கு எழுந்தாலும், உங்களுக்கு போதுமான தூக்கம் இல்லாமல் சோர்வாக இருக்கிறார்களா? 8 மணி நேரத் தூக்கத்திற்கு பிறகும் சோர்வாக உணர்ந்தால் Sleep apnea அதற்குக் காரணமாக இருக்கலாம். இரவில் சுவாசத்தில் தூங்கும் போது திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதே இந்த Sleep apnea. இது நமது தூக்கத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இவற்றை எல்லாம் முறைப்படுத்திக் கொண்டால் போதும் 8 மணி நேரம் தூங்கினாலே செம ப்ரஷாக உணர்வீர்கள்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை யாரும் மருத்துவ ஆலோசனையாகக் கருதக் கூடாது. உடலில் யாருக்காவது பிரச்சினை ஏற்பட்டால் உடனே அருகே உள்ள மருத்துவரிடம் செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications