அடடே.. இது எப்படி! ஒரே பாத யாத்திரை இரண்டு ராகுல் காந்தி.. குழம்பி போன நிர்வாகிகள்! பெரிய ட்விஸ்ட்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இப்போது பாத யாத்திரை நடந்து வரும் நிலையில், எந்தவொரு அதிகாரியும் இல்லாமல் வெள்ளை டீசர்ட் அணிந்து கொண்டு அவர் வந்துள்ளார். இதைப் பார்த்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள் பதறிப்போய்விட்டனர். ஆனால், கடைசியில் இதில் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது.
காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது நாடு முழுக்க பாத யாத்திரை சென்று வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி இந்த பாத யாத்திரையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி இவ்வளவு பெரிய பாத யாத்திரையை நடத்தியதே இல்லை. இந்த பாத யாத்திரைக்குப் பொதுமக்களிடையே மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

காங்கிரஸ்
குறிப்பாக இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தேர்தலிலும் கூட பாசிட்டிவ் முறையில் எதிரொலிக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை இப்போது உத்தரப் பிரதேசத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் இந்த பாத யாத்திரை நடந்த போது, அங்குப் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

ராகுல் காந்தி
மேலும், இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்து பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் தான் கமல்ஹாசன் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டிருந்தார். அதேபோல பொருளாதார வல்லுநரும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னருமான ரகுராம் ராஜன் தொடங்கி பலரும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியே இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டு வருவதாகப் பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே தற்போது உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தில் பாத யாத்திரையில் கலந்து கொண்ட நபர் தான் பேசுபொருள் ஆகியுள்ளார்.

பதறிய நிர்வாகிகள்
ராகுல் காந்திக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பாத யாத்திரை செல்லும் போது, அவரை சுற்றி அதிகாரிகள் இருப்பார்கள். இதனிடையே பாக்பத்தில் பாத யாத்திரையின் போது, எந்தவொரு அதிகாரியும் இல்லாமல் வெள்ளை டீசர்ட் அணிந்து கொண்டு அவர் வந்துள்ளார். இதைப் பார்த்ததும் காங்கிரஸ் நிர்வாகிகள் பதறிப்போய்விட்டனர். இருப்பினும், அவர் அருகே ஓடிச் சென்று பார்த்த போது தான், அவர் ராகுல் காந்தி இல்லை அவரை போலவே இருக்கும் பைசல் சவுத்ரி என்பது தெரிய வந்தது. வட இந்தியாவில் கடும் குளிர் நிலவும் போதிலும், ராகுல் காந்தி வெறும் டீசர்ட் மட்டும் அணிந்து கொண்டு பாத யாத்திரையில் பங்கேற்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதேபோல வெள்ளை டீசர்ட்டை இவரும் அணிந்ததே குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.

கலகல பேட்டி
பைசல் சவுத்ரி மீரட் காங்கிரஸ் கமிட்டியில் உள்ளார். தான் ராகுல் காந்தியைப் போலத் தோற்றமளிப்பதால், பொதுமக்கள் பலரும் தன்னுடன் ஃபோட்டோ எடுப்பதாகவும் சிலர் ராகுல் காந்தி என நினைத்து, வீடியோ கூட எடுப்பார்கள் என்றும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "நான் ராகுல் காந்தி போல் இருப்பதாக மக்கள் கூறுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நானும் காங்கிரஸ்காரன் தான். இந்தியாவில் இப்போது வெறுப்புணர்வு தலைதூக்கியுள்ளது. அந்த வெறுப்புணர்வை நீக்கி இந்தியாவில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த இந்த பாத யாத்திரை உதவும்" என்றார்.

உத்தரப் பிரதேசம்
இதற்கிடையில், காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை 6 மணியளவில், உபி-இல் உள்ள ஐலும் கிராமத்தில் தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்த பாத யாத்திரையில் காங்கிரஸ் கட்சியினர் பலரும் மூவர்ணக் கொடியை ஏந்திய பாத யாத்திரையில் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி வழக்கம் போல வெள்ளை டி-சர்ட் அணிந்து பாத யாத்திரையில் இறங்கினார். இந்த பாத யாத்திரையில் பெரும்பாலான நேரங்களில் ராகுல் காந்தி வெள்ளை நிற டீசர்ட் மட்டுமே அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கட்சியின் மாநில தலைவர் பிரிஜ்லால் காப்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதிரொலிக்குமா
ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரை காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருவதாகக் காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக 150 நாட்கள் நடந்த இந்த பாத யாத்திரை, அரசியல் களத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை வரும் நாட்களில் நடைபெறும் தேர்தலில் நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications