Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைரத்திற்கு வரி குறைப்பு.. குடைக்கு அதிக வரி.. பட்ஜெட் அறிவிப்பை விளாசி தள்ளும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2022- 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் குடைகளின் விலை உயரக் கூடும். இதுகுறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் வாசித்து எந்த பொருள்கள் எல்லாம் விலை குறைகிறது. எவையெல்லாம் விலை அதிகரிக்கிறது என்பதையும் தெரிவித்தார்.

அதில் விலை குறையவுள்ள பொருட்கள் ஆடைகள், ரத்தினக் கற்கள், வைரங்கள், செல்லுலார், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ், மொபைல் போன் சார்ஜர்கள், உறைந்த சிப்பிகள், உறைந்த கடம்பா மீன்கள், பெருங்காயம், கோகோ பீன்ஸ், மெத்தில் ஆல்கஹால், பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள் ஆகும்.

ஸ்மார்ட் மீட்டர்

ஸ்மார்ட் மீட்டர்

அது போல் விலை அதிகரிக்கும் பொருட்கள் - குடைகள், கவரிங் நகைகள், ஒலிபெருக்கிகள், ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள், ஸ்மார்ட் மீட்டர், சூரிய செல்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள், மின்னணு பொம்மைகளின் பாகங்கள் உள்ளிட்டவை ஆகும். இந்த விலையேற்ற பொருட்களில் மிகவும் விவாத பொருளானது குடைகள்தான்.

குடைகளின் விலை உயர்வு

குடைகளின் விலை உயர்வு

குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் உயர்த்தப்பட்டதால் அதன் விலை உயருகிறது. இவை வெயில் மற்றும் மழை காலங்களில் மக்களுக்கு உதவியாக இருக்கின்றன. இந்த பொருளை விலை உயர்த்தியது, ட்விட்டரில் நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

பட்ஜெட்டின் முக்கிய அம்சமே குடைகளுக்கான இறக்குமதி வரி 20 சதவீதம் உயர்வுதான் என்கிறார் இந்த நெட்டிசன்.

குடைகள் மீது வரி ஏன்

குடைகள் மீது வரி ஏன்

என்னா பட்ஜெட் இது, நடுத்தர மக்களுக்கான எந்த அம்சமும் இதில் இல்லை. குடைகள் மீது வரி விதிப்பு ஏன்?

குடைகளுக்கான வரி உயர்வு ஏன்

குடைகளுக்கான வரி உயர்வு ஏன்

இந்தியாவில் குடைகளுக்கான மொத்த விற்பனை தொகை எவ்வளவு? குடைகளுக்கான வரியை அதிகரித்தது ஏன்?

குடைக்கு கீழ் நிற்க முடியாத நிலை

குடைக்கு கீழ் நிற்க முடியாத நிலை

குடைகளின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் தங்களை காக்க குடைகளுக்கு கீழ் நிற்க கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் இந்த நெட்டிசன்.

Recommended Video

    Union Budget 2022 : யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
    பணக்காரர்கள்

    பணக்காரர்கள்

    பணக்காரர்கள் பயன்படுத்தும் வைரங்களுக்கு விலை குறைப்பு, ஏழைகள், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குடைகள், வேளாண் கருவிகளுக்கு விலையை உயர்த்துவதா? மத்திய அரசு யாருக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது இந்த பட்ஜெட்டிலேயே தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+