"காலிஸ்தானி" விவகாரம்.. 3 இந்தியர்களை கைது செய்த கனடா போலீஸ்! இரண்டே வரியில் ஜெய்சங்கர் நறுக் பதில்
டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலையில் 3 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ள நிலையில், இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தானில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங், அங்குப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்தில் இந்தியாவுக்குத் தொடர்பாக இருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னது சர்ச்சையானது.

இதையடுத்து இரு நாட்டு உறவுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதேநேரம் ஹர்தீப் சிங் மரணம் தொடர்பாக விசாரிக்கக் கனடா போலீசார் விசாரணைக் குழுவையும் அமைத்தனர்.
3 பேர் கைது: இந்தச் சூழலில் கனடா போலீசார் ஹர்தீப் சிங் கொலை தொடர்பாகக் கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் non-permanent residents அந்தஸ்தில் வசிப்பவர்கள். மூன்று பேரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மூவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாதாம். மேலும், அவர்களுக்கு இந்தியா உடன் இருக்கும் தொடர்பு குறித்தும் அந்நாட்டு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜெய்சங்கர்: இதற்கிடையே இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களைக் கனடா போலீசார் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவர், அதுவரை இந்தியா இந்தியா காத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
கைது குறித்து செய்திகளில் பார்த்தே தெரிந்து கொண்டதாகக் கூறிய அவர், சந்தேக நபர்கள் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் போல தெரிவதாகத் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவலைக் கனடா போலீசாரிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
என்ன சொன்னார்: இந்த விவகாரத்தில் அவர் மேலும் கூறுகையில், "ஆனால், நான் சொல்வது ஒன்றைத் தான். இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போது மீண்டும் சொல்கிறேன்.. அதாவது அவர்கள் (கனடா) இந்தியாவில் இருந்து, குறிப்பாகப் பஞ்சாபிலிருந்து, வருவோர் கனடாவில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட அனுமதித்துள்ளனர். அதுவே பிரச்சினைக்குக் காரணம்" என்றார்.
இந்திய தூதர்: அதேபோல என்று கனடாவுக்கான இந்திய உயர் ஆணையர் சஞ்சய் வர்மாவும் இந்த விவகாரத்தில் கருத்து கூறியுள்ளார். அதாவது கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் குறித்து கனடா அதிகாரிகளிடம் இருந்து அப்டேட்களை பெறுவோம் என நம்புவதாக என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "கனடா அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்பது தெரிகிறது. தற்போது வரை பார்க்கும் போது இது அவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை போலவே தெரிகிறது.. இதனால் நாங்கள் கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
செய்யப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த பிரச்சினை கனடாவிற்கு உள்பட்டது, எனவே இது தொடர்பாக எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை" என்று திரு வர்மா மேலும் கூறினார்.












Click it and Unblock the Notifications