டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்தியாவில் போராட்டம்.. அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித் ஷாவிற்கு தடை விதிக்க அமெரிக்கா ஆணையம் பரிந்துரை | USCIRF seeks sanctions against Amit Shah

    டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகின்றன. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தடியடி நடத்தினர். எனவே, மாணவர்கள் போராட்டம் நாடு முழுக்க பரவியுள்ளது.

    இந்த நிலையில், மாணவர்களை தாண்டி, பொதுமக்களும், இஸ்லாமிய மதத்தினரும் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    ஒரு கேட்டுக்கு அந்த பக்கம் பெருவாரியான முஸ்லீம் மக்களும், இந்த பக்கம், போலீசாரும் நிற்க கூடிய ஒரு புகைப்படம் செய்தி ஏஜென்சியொன்றால் எடுக்கப்பட்டது. இந்த போட்டோ, அமெரிக்காவின் முன்னணி நாளிதழ்களில் முதல் பக்கத்தை பிடித்துள்ளது.

    3 முக்கிய நாளிதழ்கள்

    தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய அமெரிக்காவின் மிக முக்கிய நாளிதழ்களில் இந்த படங்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறி, புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது. அதிலும், நியூயார்க் டைம்ஸ் தனது தலைப்பு செய்தியில், இந்தியாவை இந்து நாடாக மாற்றும் மோடியின் முயற்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    பொருளாதார நிலை

    பொருளாதார நிலை

    இதுபோன்ற செய்திகளால், இந்தியாவில் பதற்றம் நிலவி வருவதுபோன்ற தோற்றம் முதலீட்டாளர்களுக்கு உருவாகி, அன்னிய முதலீடுகள் வருகை குறைந்துவிடும் என்ற அச்சத்தை நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே பொருளாதார தேக்கம் நிலவும் நாட்டில் இதுபோன்ற போராட்டங்கள் இன்னும் எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என்ற அச்சமும் உள்ளது.

    அதிகம் இணைய கட்

    அதிகம் இணைய கட்

    தி நியூயார்க் டைம்ஸ் தனது மற்றொரு செய்தியில், உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில்தான், அதிகமான அளவுக்கு, இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

    உலகிலேயே அதிகம் இணையதள சேவை முடக்கம் நடப்பது நம்ம டிஜிட்டல் இந்தியாவில்தான்! காரணம் வன்முறைகள்உலகிலேயே அதிகம் இணையதள சேவை முடக்கம் நடப்பது நம்ம டிஜிட்டல் இந்தியாவில்தான்! காரணம் வன்முறைகள்

    பிரான்ஸ் நாடு அளவுக்கு

    இந்த வாரத்தில் மட்டும் 60 மில்லியன் மக்கள், அதாவது ஒரு பிரான்ஸ் நாட்டின் அளவுக்கான மக்களால் இணையதள சேவையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது என்றும், அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

    English summary
    US leading news papers Front page coverage for India, are here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X