நாம் நம்புவது உண்மை வரலாறு அல்ல... சாவர்க்கர் எழுதிய வரலாறு தெரியுமா? - அமித்ஷா
டெல்லி: மறைக்கப்பட்ட இந்திய மன்னர்களின் வரலாறுகள் எழுதப்பட்டால் நாம் நம்புவது உண்மையான வரலாறு அல்ல என்பது உறுதியாகும் என்றும், சாவர்க்கர் முதல் சுதந்திரப்போர் பற்றிய வரலாற்றை எழுதியதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒருங்கிணைந்த இந்தியாவை அமைக்க குப்தர் வம்சத்தை சேர்ந்த சமுத்திர குப்தர் கனவு கண்டார். அவர் பற்றி எந்த வரலாற்றிலும் இடம்பெறவே இல்லை. முகலாயர்களுக்கு எதிராக வீரத்தோடு போராடிய மராட்டிய மன்னர் சிவாஜி, ராஜஸ்தான் மேவாட் பகுதியில் மன்னராக இருந்த பப்பா ராவல் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த முகலாயர்களை வீழ்த்தி விரட்டியடித்தார். வரலாற்றில் அவர் குறித்தும் எவ்விதமான தகவல்களும் இடம்பெறவில்லை.

சீக்கிய குருக்கள் தொடங்கி பலர் நாட்டிற்காக உயர் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் குறித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டம் பற்றிய சாவர்க்கர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் மட்டும் அதை செய்யாவிட்டால் முந்தையகால வரலாற்றில் இடம்பெற்று இருக்கும் உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கும். நாட்டை ஆட்சி செய்த பண்டைய மன்னர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை? இனியாவது அவர்களை பற்றி அதிகளவிலான புத்தகங்களை எழுதுங்கள்.
அதுபோல் புத்தகங்கள் எழுதப்பட்டால் நாம் நம்பும் வரலாறுகளில் பல தவறானவை என்பதை உணர்வோம். ஏராளமான உண்மைகள் வெளிவரும். வரலாற்று ஆசிரியர்கள் இந்த பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். அந்நியர்களை எதிர்த்து போராடிய ராஜஸ்தான் மன்னர்கள் குறித்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம். இதனை எழுதிய ஓமேந்திர ரத்னுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் ராஜஸ்தானின் உண்மையான வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். வரலாறுகளை அரசு தரப்பில் வெளியிட்டால் சர்ச்சைகள் பல எழும். வரலாற்று அறிஞர்கள்தான் இதை செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications