பொன்முடியை இன்று அமைச்சராக்காவிட்டால்! ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கும்?
டெல்லி: தமிழ்நாடு அமைச்சராக பொன்முடிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல் மறுத்ததால் ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்த நிலையில் ஆளுநர் அதன் மீது எந்த முடிவும் எடுக்காவிட்டால் எந்த மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் தெரியுமா?
பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என விதித்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை குற்றவாளி என அறிவித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது பொன்முடியின் தண்டனையையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் ஒருவர் தனது பதவியை இழப்பார். அது போல்தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் பொன்முடி தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவிகளை இழந்தார்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை பொன்முடி வழக்கில் அளித்தது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி திரும்ப கிடைத்துவிட்டது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டது.
இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் முதல்வர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் ஆளுநரோ பொன்முடியின் தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டது. அவரது குற்றவாளிதான் எனவே அவருக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என கறாராக கூறிவிட்டார்.
இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. அப்போது ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களை தெரிவித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை வரை (அதாவது இன்று வரை) கால அவகாசம் வழங்குகிறோம்.
பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் தமது முடிவை தெரிவிக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை. தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் எதன் அடிப்படையில் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தெரிவித்திருந்தார்.
அதற்கான உரிமையை அவருக்கு யார் கொடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் ரவி மீறிவிட்டார். ஆளுநர் அரசியல் சாசனத்தை பின்பற்றாத போது மாநில அரசு என்ன செய்யும். ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் சரியில்லை, ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். ஒருவரின் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் அவருக்கு தண்டனையே விதிக்கப்படவில்லை என்பதுதானே அர்த்தம். அப்படியிருக்கும் போது பொன்முடியை எப்படி கறைபடிந்தவர் என கூறமுடியும் என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த நிலையில் பொன்முடி விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க ஆளுநர் ரவிக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே ஆளுநர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுநர் ரவியின் முன்பு இருக்கும் ஆப்ஷன்கள் இரண்டுதான்.
அதாவது உச்சநீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாகாமல் பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது. இரண்டாவது உச்சநீதிமன்ற கெடுவையும் மதிக்காமல் விடுவது. ஒரு வேளை உச்சநீதிமன்றத்தின் கெடுவையும் மீறி ஆளுநர் ரவி நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் சிலரை கேட்ட போது உச்சநீதிமன்ற கெடுவை ஆளுநர் மதிக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை வைத்து பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடலாம். மாநிலத்தில் ஆளுநர் இல்லாத சூழலில்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது போன்ற பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஆளுநர் ரவி பதவியில் இருக்கும் போதே இது போன்ற ஒரு உத்தரவை, உச்சநீதிமன்றம் பிறப்பித்தால் ஆளுநர் ரவி பதவியில் நீடிப்பதற்கு கடும் நெருக்கடி உருவாகும் என தெரிகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications