ஒரு பக்கம் ED! மறுபக்கம் வங்கி கணக்கு, சொத்து கணக்கை கேட்கும் என்சிபி! அமீருக்கு மீண்டும் சம்மன்?
டெல்லி: இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு வருமாறு டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு கால அவகாசம் கேட்டு அமீரும், டெல்லி என்சிபி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் உணவு பொருள் டெலிவரி என்ற பெயரில் ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அதை கொண்டு வந்த சிலரை கைது செய்தனர். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பொருள் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமானது என தெரியவந்தது.

உணவு டெலிவரி என்ற பெயரில் நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதை பொருளை அவர் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.
ஜாபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இயக்குநர் அமீர், பாசித் புகாரி உள்ளிட்டோரின் பெயர்களை வாக்குமூலமாக தெரிவித்திருந்தாராம். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர், இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பினர். அதில் போதை பொருள்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைத்தனர்.
அதன்பேரில் அமீர் உள்ளிட்டோர் தங்கள் வழக்கறிஞர்களுடன் டெல்லி அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது அமீரிடம், " 2020-2023 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சொத்து கணக்கு ஆவணங்களையும் அந்த 3 ஆண்டு கால வங்கிக் கணக்கு தகவல்களையும் எடுத்துக் கொண்டு 5ஆம் தேதி ஆஜராகுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறையினர் ஜாபர் சாதிக் வீடு, அலுவலகம், இயக்குநர் அமீரின் வீடு அலுவலகம், பாசித் புகாரியின் வீடு, அலுவலகம் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமீர் வீட்டிலிருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமீருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியதாக தெரிகிறது. இதற்கு அமீர் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்சிபி என்ன முடிவு எடுக்கும் என தெரியவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications