செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? அக்.,30ல் விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் யார் தெரியுமா?
டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் அவரது ஜாமின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளின் பெயர் இன்று வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி அவர் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமைறைவாக உள்ளார். இதனால் ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உடல் நிலையை காரணம் காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது எனக்கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த 19 ம் தேதி வழக்கறிஞர் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்கே கவுல் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தார். அதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதோடு நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையையொட்டி உச்ச நீதிமன்றத்துக்கு 10 நாட்கள் விடுமுறை என்பதால், வரும் 30ம் தேதி இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் நாளை மறுநாள் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த மனு மீது விசாரிக்கும் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி அமர்வு அவரது ஜாமின் மேல்முறையீடு மனுவை விசாரிக்க உள்ளது. அன்றயை தினம் 61வது வழக்காக செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. இதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
****
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications