மோடி 3.o அமைச்சரவை.. நாட்டின் இளம் அமைச்சர் முதல் பணக்கார அமைச்சர் வரை.. ஆந்திராவில் இருந்து 3 பேர்!
டெல்லி: இன்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் ஆந்திராவில் இருந்து 3 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். அவருடன் என்டிஏ தலைமையிலான மூன்றாவது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் மொத்தம் மூன்று பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். அங்குள்ள தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து இருவரும், பாஜக எம்பி ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ராம்மோகன் நாயுடு: தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் எம்பியாக தேர்வாகி இருப்பவர் ராம்மோகன் நாயுடு.. மோடி அமைச்சரவையில் உள்ள இளம் மத்திய அமைச்சராக இவர் இருக்கிறார். 36 வயதான இவர் லோக்சபா தேர்தலில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.
ஸ்ரீகாகுளம் தொகுதியில் கடந்த 2014இல் ராம்மோகன் நாயுடு முதலில் தனது 26 வயதில் எம்பியாக தேர்வானார். இப்போது 3ஆவது முறையாகத் தொடர்ந்து அங்கிருந்து இவர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது சந்தை தந்தை, மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் யெர்ரான் நாயுடு..
1996இல் தேவகவுடா ஆட்சி அமைத்த போது யெர்ரான் நாயுடு தனது 39 வயதில் மத்திய அமைச்சராகப் பதவிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அவர் தேவகவுடா மற்றும் ஐ.கே குஜரால் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.
சந்திரசேகர்: அடுத்து லிஸ்டில் இருப்பவர் குண்டூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யாக தேர்வாகி இருக்கும் சந்திரசேகர் பெம்மாசானி.. 48 வயது மருத்துவரான இவர் குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வென்ற கோடீஸ்வர வேட்பாளர்களில் இவரும் ஒருவர். இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 5,700 கோடி என்று இவர் பிரமாண பத்திரத்திலேயே குறிப்பிட்டுள்ளார். இவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பூபதி ராஜு சீனிவாச வர்மா: ஆந்திர மாநில பாஜக எம்பி பூபதி ராஜு சீனிவாச வர்மாவும் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். நர்சபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சீனிவாச வர்மா இந்த முறை லோக்சபா தேர்தலில் 2.76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆந்திராவில் பாஜக சார்பில் மொத்தமே மூன்று எம்பிக்கள் மட்டுமே வென்றிருந்த நிலையில், அதில் பூபதி ராஜு சீனிவாச வர்மாவும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications