யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி ரவிக்குமார்.. நொய்டாவின் புதிய சிஇஒ.. உபியில் யோகி காட்டிய அதிரடி
டெல்லி: டெல்லியை ஒட்டி உள்ள உத்தரப்பிரதேச பகுதி கிரேட்டர் நொய்டா என்று அழைக்கப்படுகிறது. டெல்லியின் புறநகர் பகுதியாக உள்ள கிரேட்டர் நொய்டா ஆணையத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரவிக்குமார் என்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யார் என்பதை இப்போது பார்ப்போம்.
நொய்டா நகரம் உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தலைநகர் புது டெல்லியில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நொய்டா, டெல்லியின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருப்பதால் நிர்வாக ரீதியாக கட்டுப்பாடுகள் முழுமையாக உத்தரப்பிரதேசத்தில் தான் உள்ளது.

இந்த பகுதி டெல்லிக்கு நிகராக வளர்ந்துள்ளது. டெல்லியின் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் அத்தனையும் நொய்டாவில் தான் அமைந்துள்ளது. டெல்லியின் ஐடி நகரமாக நொய்டா பகுதி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோவை விட நொய்டா நிர்வாக ரீதியாகவும், மக்கள் அடர்த்தி ரீதியாகவும் முக்கியமான நகரமாகும். இந்த நகரத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரிது மகேஸ்வரி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். ரிது மகேஸ்வரிக்கு எதிராக நொய்டா விவசாயிகள் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை மாற்றி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கிரேட்டர் நொய்டா ஆணையத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ரவிக்குமார் என்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் ரவிக்குமார் என்ஜி யார் என்று பார்ப்போம்.
கர்நாடகாவை சேர்ந்த ரவிக்குமார், உத்தரபிரதேச மாநில கேடரில் சேர்ந்த 2004 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் முதன்முதலாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு பல்வேறு பணிகளை பார்த்தவர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறையின் இயக்குநர் ஜெனரலாகவும், கலாச்சாரம் மற்றும் மத விவகாரச் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஐஏஎஸ் ரவிக்குமார் முன்னாள் அமைச்சர் உமாபாரதியின் தனிச் செயலாளராகவும் பணியாற்றினார். 2021 ஆம் ஆண்டில், கோரக்பூர் பிரிவின் ஆணையராக ஐஏஎஸ் ரவிக்குமார் என்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை இடமாற்றம் செய்து உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோரக்பூரின் மாவட்ட நிர்வாக அதிகாரி கிருஷ்ண கருணேஷுக்கு டிவிசினல் கமிஷ்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ரவீந்திர குமார் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த ரஞ்சன் குமார் மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நரேந்திர பூஷன் உத்தரபிரதேச விரைவுச்சாலை தொழில் மேம்பாட்டு ஆணையத்தில் (யுபிஐடிஏ) இருந்து நீக்கப்பட்டுள்ளார். மூத்த ஐஏஎஸ் அதிகாரி மனோஜ் சிங் UPEDA வின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications