இஸ்லாமியருக்கு வாய்ப்பு? அடுத்த துணை ஜனாதிபதி யார்? மனோஜ் சின்ஹா உள்பட லிஸ்ட்டில் 4 தலைவர்கள்
டெல்லி: துணை ஜனாதிபதி பதவியை ஜெகதீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் இன்று மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான போட்டியில் 2 இஸ்லாமியர்கள் உள்பட மொத்தம் 4 பேரின் பெயர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டின் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.

தனது உடல்நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று அவர் ராஜினாமா செய்ததால் இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியது.
ராஜினாமா ஏற்பு
மத்திய அரசின் பிரஷர் காரணமாக தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கிடையே தான் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு இன்று ஏற்றுக்கொண்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அரசியலமைப்பின் 67 (a) பிரிவின் கீழ் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த துணை ஜனாதிபதி யார்?
இந்நிலையில் தான் அடுத்த துணை ஜனாதிபதி யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது பாஜக கூட்டணிக்கு தான் அதிக எம்பிக்கள் உள்ளனர். இதனால் அடுத்த துணை ஜனாதிபதி பாஜக கூட்டணியில் இருந்து தான் இருப்பார். மேலும் தற்போது கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் ராஜ்யசபாவில் தலைவர் பதவியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இதனால் பாஜக தலைவர்களில் ஒருவர் தான் துணை ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் களமிறக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனோஜ் சின்ஹா
அந்த வகையில் துணை ஜனாதிபதி போட்டிக்கான ரேஸில் முதல் இடத்தில் இருக்கும் பெயர் மனோஜ் சின்ஹா. இவர் பாஜகவின் மூத்த தலைவர். தற்போது ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருப்பவர். ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது சர்ச்சையை கிளப்பியது. அப்போது மனோஜ் சின்ஹாவை துணை நிலை ஆளுநராக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி தான் நியமித்தார்.
மனோஜ் சின்ஹா உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றபோது முதல்வர் பதவிக்கான ரேஸில் இவரது பெயரும் இருந்தது. ஆனால் யோகி ஆதித்யநாத் தட்டிச்சென்றார். இவர் பிரதமர் மோடியின் முதல் மத்திய அமைச்சரவையில் தனி அதிகாரம் கொண்ட தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு தான் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 17 ம் தேதி அவர் பிரதமர் மோடியை 45 நிமிடங்கள் வரை சந்தித்து பேசினார். இப்போது மீண்டும் அவர் இன்று ஸ்ரீநகரில் இருந்து டெல்லி புறப்பட உள்ளார் இதனால் மனோஜ் சின்ஹா துணை ஜனாதிபதியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2வது இடத்தில் ஜேபி நட்டா
இதற்கு அடுத்தப்படியாக பாஜகவின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜேபி நட்டாவின் பெயர் உள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடியுடன் நெருக்கமான இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக செயல்பட்டு வுருகிறார்.
தற்போது குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் துணை ஜனாதிபதியாகி நியமித்து அந்த சபையை முன்னெடுக்க பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இஸ்லாமியருக்கு வாய்ப்பு?
அதேபோல் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க நினைத்தால் பீகார் ஆளுநராக இருக்கும் ஆசிப் முகமது கானுக்கு வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத்தின் பெயரும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications