Nitin Nabin: பாஜகவிற்கு புதிய தேசிய செயல் தலைவர்.. பீகார் வெற்றிக்காக மேலிடம் அளித்த பரிசு! யார் இந்த நிதின் நபின்?
டெல்லி: பீகார் மாநிலத்தில் அமைச்சாராக இருக்க கூடிய நிதின் நபின் பாஜக தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜேபி நட்டா பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது புதிய செயல் தலைவரகா நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் அரசியலில் எப்படி கால் பதித்தார் என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பாஜக தேசிய செயல் தலைவராக இருக்க கூடிய ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய செயல் தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தார். இந்த நிலையில், புதிய செயல் தலைவராக நிதின் நபினை பாஜக மேலிடம் நியமித்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் பாஜகவின் பாரளாமன்ற குழு உறுப்பினராக உள்ளார்.

யார் இந்த நிதின் நபின்?
பீகாரில் நிதிஷ் தலைமையிலான கூட்டணி அரசில் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். பீகாரில் பாஜக வெற்றிக்கு இவரது உழைப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில்தான் அவருக்கு கட்சி மேலிடம் மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது.
பாட்னாவில் பிறந்த இவர் பாஜகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன் ஆவார். அவரது தந்தை மறைவுக்கு பிறகு நேரடி அரசியலில் நிதின் நபின் நுழைந்தார். பனிகாபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார். 2006 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை எம் எல்.ஏவாக உள்ளார்.
சத்ருகன் சின்கா மகனை தோற்கடித்தார்
பாஜகவின் இளைஞர் பிரிவான பிஜெஒய்எம் செயலாளாரகவும் இவர் உள்ளார். 45 வயதான இவர் பீகார் பாஜகவில் மிக முக்கிய முகமாக உள்ளார். பன்கிபூர் தொகுதியில் 2010, 2015, 2020, 2025 என தொடர்ந்து வெற்றி பெற்ற நிதின் நபின், கடந்த 2020 ஆம் ஆண்டும் சத்ருகன் சின்காவின் மகன் லுவ் சின்காவை பெருவாரியான வாக்குகள் (84 ஆயிரம் வாக்குகள்) வித்தியாசத்தில் வென்றார்.
பீகாரில் பாராட்டை பெற்றவர்
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில், 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நபின் வெற்றி பெற்று இருந்தார். பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுச்செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கட்சியை பூத் லெவல் அளவில் வலுப்படுத்துவதில் வல்லவர் என்று பீகாரில் பரவலாக பாராட்டை பெற்றுள்ளார்.
மக்கள் எளிதில் அணுகும் வகையில்
உள்ளூர் மக்கள் எளிதில் அணுகும் அளவில் லோக்கல் பிரச்சினைகளை விரல் நுனியில் அறிந்து வைத்து இருப்பவர் என்றும் பீகார் பாஜகவினர் இவரைப்பற்றி கூறுகிறார்கள். கயசத் (Kaysath) சமூகத்தை சேர்ந்தவர். பீகார் பாஜகவில், தேர்தல் வெற்றியும் வலுவான அமைப்புத் திறனும் கொண்ட தலைவராக அறியப்படுகிறார். பாஜக தேசிய செயல் தலைவர் பொறுப்புக்கு இவரை தேர்வு செய்ய இந்த நிதின் நபினின் இந்த பண்புகளே காரணம் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இவற்றை எல்லாம் கவனித்து தான் பாஜக தேசிய செயல் தலைவராக தற்போது நிதின் நபினை நியமித்து பாஜக தலைமை அறிவித்துள்ளது.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications